Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கப்பா அவர் பொருந்துவாரு.. ஸ்மித்தால் டெல்லி அணிக்கு குழப்பம் ஏற்படும்.. கவுதம் கம்பீர் அதிருப்தி

சென்னை: ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறித்து கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் முக்கிய வீரர்கள் பலரை ஏலம் எடுக்க அணிகள் முன்வரவில்லை.

அந்தவகையில் முதல் சுற்றில் எந்த அணியும் எடுக்க முன்வராமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.

ஏலம்

ஏலம்

ராஜஸ்தான் ராயல் அணியால் கழட்டிவிடப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு ஏலம் விடப்பட்டார். ஆனால் அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் ஆர்.சி.பி அணி அவரை வாங்க முயற்சித்த போது டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.2.25 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அனுபவம்

அனுபவம்

31 வயதாகும் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல்-ல் இதுவரை 95 போட்டிகளில் ஆடி 2,333 ரன்கள் அடித்துள்ளார். அவரின் சராசரி ரன் விகிதம் 35.34 ஆக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த ஸ்மித் இந்தாண்டு கழட்டிவிடப்பட்டார்.

அதிருப்தி

அதிருப்தி

இது குறித்து பேசிய கவுதம் கம்பீர், டெல்லி அணியில் ஸ்டீவ் ஸ்மித் எங்கு பொறுந்துவார் என புரியவில்லை. அணியில் ரிஷப் பண்ட், சிம்ரன் ஹெட்மெயர் மிடில் ஆர்டரில் பலமாக உள்ளனர். டாப் ஆர்டரில் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்தீவி ஷா, ரஹானே உள்ளனர். இதனால் ஸ்டீவ் ஸ்மித் என்ன செய்வார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

குழப்பம்

குழப்பம்

டெல்லி அணியில் அயல்நாட்டு வீரர்கள் அதிகம் உள்ளனர். மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெட்மேய்ர், கிறிஸ் வோக்ஸ், சாம் பில்லிங்ஸ், டாம் கரண், ரபாடா, அன்ரிக் நார்ஜே ஆகியோர் உள்ளதால் அயல்நாட்டு வீரர்களை களம் இறங்குவதில் டெல்லி அணி சிரமப்படும் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, February 20, 2021, 8:39 [IST]
Other articles published on Feb 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+