Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி பௌலர் பிட்டாயிட்டாரு... அதிரடி கிளப்ப தயாரா இருக்காரு... ஆட்டத்தை பார்க்க நீங்க ரெடியா?

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடரின் 13வது போட்டியான இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 4வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்றைய போட்டியில் மோதவுள்ளது.

13வது போட்டி

13வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

4வது இடத்தில் மும்பை அணி

4வது இடத்தில் மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ் அணியும் 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.

ஷிகர் தவான் கவலை

ஷிகர் தவான் கவலை

சென்னையில் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடி மனதளவிலும் உடலளவிலும் அதன் பிட்ச்சுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தயாராகி உள்ளதாகவும் ஆனால் தனது முதல் போட்டியை இன்றைய தினம் சென்னையில் விளையாடவுள்ள டெல்லி அணி அதன் பிட்ச்சுக்கு தயாராவது சவாலாக இருக்கும் என்றும் டெல்லியின் துவக்க வீரர் ஷிகர் தவான் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் தகவல்

டெல்லி கேபிடல்ஸ் தகவல்

அணியின் காகிசோ ரபடா மற்றும் லுக்மன் மேரிவாலா ஆகியோர் இன்னும் தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்த தவறியுள்ள நிலையில், கடந்த போட்டிகளில் அணியின் ஆவேஷ் கான் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத அணியின் நட்சத்திர வீரர் இஷாந்த் சர்மா அணியில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிட்டான இஷாந்த் சர்மா

பிட்டான இஷாந்த் சர்மா

குதிகால் வலியால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கேபிடல்ஸ் பௌலர் இஷாந்த் சர்மா, தற்போது பிட்டாக உள்ளதாகவும் அவர் அணியில் இணையவுள்ளதாகவும் டெல்லி கேபிடல்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து அணியின் பௌலிங் அட்டாக் சிறப்பாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Story first published: Tuesday, April 20, 2021, 17:49 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+