For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL-பார்ட்டியில் டெல்லி வீரர்கள் செய்த அட்டகாசம்.. பெண்ணிடம் அத்துமீறியதாக புகார்..விசாரணைக்கு உத்தரவு

டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி தேவையில்லாத சர்ச்சை ஒன்றில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணி முதலில் விளையாடிய ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியது.

இதனை அடுத்து அதன் பிறகு நடைபெற்ற இரண்டு போட்டிகளில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக டெல்லி அணி ஒரு பார்ட்டியை நடத்தி இருக்கிறது.

இந்தப் பார்ட்டியில் டெல்லிய சேர்ந்த வீரர் ஒருவர் அங்கு வந்திருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளது.

Delhi capitals player accused of misbehaving with girl in the party

இதனை அடுத்து அங்கு இருந்த பாதுகாவலர்கள் அந்த வீரரை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இது டெல்லி அணி நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது வீரர்களின் நன்னடத்தைக்கு எதிரானது என்பதால் புகாருக்குள்ளான வீரருக்கு டெல்லிய அணி நிர்வாகம் நோட்டீஸ் அளித்து இருப்பதாகவும் அவருடைய ஒப்பந்தம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் புகாருக்குள்ளான வீரரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வீரரின் இந்த நடவடிக்கை குறித்து ஐபிஎல் நிர்வாகத்திற்கும் டெல்லி அணி அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட வீரர் அணியுடன் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அந்த வீரரின் குடும்பத்தினரின் செலவுகளை அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மாட்டாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி அணி தனது அடுத்த ஆட்டத்தை வரும் சனிக்கிழமை ஹைதராபாத் அணி உடன் விளையாட உள்ளது.

Story first published: Thursday, April 27, 2023, 20:05 [IST]
Other articles published on Apr 27, 2023
English summary
Delhi capitals player accused of misbehaving with girl in the party IPL-பார்ட்டியில் டெல்லி வீரர்கள் செய்த அட்டகாசம்.. பெண்ணிடம் அத்துமீறியதாக புகார்..விசாரணைக்கு உத்தரவு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+