Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC களமிறக்கும் மெகா ஆல் ரவுண்டர்.. எதிர்பார்க்காத CSK - கோச் ரிக்கி பாண்டிங்கின் "ராஜதந்திரம்"

துபாய்: குவாலிஃபயர் 1 போட்டி இன்று (அக்.10) நடைபெறவுள்ள நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி மிக முக்கிய மாற்றத்தை மேற்கொள்கிறது.

ஐபிஎல் 2021 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, Qualifier 1 ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் வெற்றிப் பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும். வெளியேறும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றிப் பெறும் அணியோடு மோதும் இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும்.

 தோனியால் தடுமாறும் சிஎஸ்கே

தோனியால் தடுமாறும் சிஎஸ்கே

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதியில், வெற்றிகளை குவித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆஃப் முன்னேறியது. தோனியின் மோசமான ஃபார்ம் மட்டுமே, அணியின் பிரச்சனையாக இருந்தது. பிறகு, அணியின் மிடில் ஆர்டரும் ஒவ்வொரு போட்டியிலும் தடுமாறியது. ராயுடு தவிர, மிடில் ஆர்டரில் மற்ற வீரர்களால் சோபிக்கவே முடியவில்லை. குறிப்பாக, மொயீன் அலி, ரெய்னா, தோனி ஆகியோரது பேட்டிங் பற்றி கருத்து கூட சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் சரியாக விளையாடவில்லை எனில் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை. இறுதிக் கட்டத்தில் ஜடேஜா முடிந்த அளவு அடிக்கிறார். அவ்வளவு தான். இவர்கள் மூவரும் சரியாக விளையாடவில்லை எனில், சென்னை அணியால் 100 ரன்கள் கூட அடிக்க முடியாது என்பதே யதார்த்தம்.

 பல வியூகம்

பல வியூகம்

இந்த இக்கட்டான நிலையில் தான், இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் சென்னை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஆர்டரில் உத்தப்பாவுக்கு பதில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல், பவுலிங் யூனிட்டில் ஜோஷ் ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜேசன் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், டெல்லியும் சென்னை அணிக்கு எதிராக பல வியூகங்களை வகுத்து வருகிறது.

 சிக்கலில் சிஎஸ்கே

சிக்கலில் சிஎஸ்கே

அதில் குறிப்பானது, ஓப்பனர்களை விரைவாக அவுட் செய்வது.ஆம்! ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் ஆகியோரை, பவர் பிளேக்குள் வீழ்த்தி விட வேண்டும் என்பதே டெல்லியின் பிரதான வியூகமாகும். இருவரையும் 6 ஓவர்களுக்குள் அவுட் செய்துவிட்டாலே, சென்னை அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்பதை டெல்லி நன்கு உணர்ந்து வைத்துள்ளது. இறுதிக் கட்டத்தில் பவுலர்களை விளாசும் அளவுக்கு ஹிட்டர்கள் இல்லை என்பதும் டெல்லி பிளஸ் பாயிண்ட் தான். ஜடேஜா அடித்தால் தான் உண்டு. அவர் அடிக்கவில்லை எனில், கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்கள் நிச்சயம் வராது.

 மார்கஸ் ஸ்டாரய்னிஸ்

மார்கஸ் ஸ்டாரய்னிஸ்

அதேசமயம், டெல்லி அணியும் தனது பிளேயிங் லெவனை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. இதில், மிக முக்கிய மாற்றமாக, தங்கள் அணியின் டாப் ஆல்ரவுண்டரை மீண்டும் களமிறக்குகிறது டெல்லி. ஆம்! காயம் காரணமாக கடந்த சில போட்டிகளாக விளையாடாமல் இருந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், இந்த போட்டியில் விளையாடுவது ஏறக்குறைய உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில போட்டிகளில், வெறும் மூன்று வெளிநாட்டு வீரர்களை வைத்துக் கொண்டு விளையாடிய டெல்லி, இம்முறை ரிபல் படேலுக்கு பதில் ஸ்டாய்னிஸை களமிறக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே வலிமையாக உள்ள டெல்லி அணியின், ஆல் ரவுண்டர் ஸ்டாய்னிஸும் இடம்பிடித்தால், சென்னை அணிக்கு அது மேலும் சவாலாக அமையும்.

Story first published: Sunday, October 10, 2021, 19:59 [IST]
Other articles published on Oct 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+