Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்ட திட்டமெல்லாம் "க்ளோஸ்".. ராஜஸ்தான் படு உஷார்.. நொந்து நூலான டெல்லி கேபிட்டல்ஸ்

அபுதாபி: பலம் வாய்ந்த டெல்லி அணியை வச்சு செய்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். டெல்லி ரசிகர்கள் புலம்பாத குறை தான்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.25) டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்களில் முதல் போட்டியாக அபுதாபியில், ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன.

இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

 டெல்லி பிளேயிங் லெவன்

டெல்லி பிளேயிங் லெவன்

டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்ய டெல்லி பேட்டிங்கை தொடங்கியது. டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (c & wk), ஷிம்ரோன் ஹெட்மயர், லலித் யாதவ், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றனர். ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (c & wk), லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தெவாட்டியா, கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம்பெற்றனர்.

 தவான் காலி

தவான் காலி

இதில், இந்த தொடரில் அதிக ரன்கள் விளாசி 'Orange Cap' ஹோல்டராக வலம் வரும் ஷிகர் தவான், ஜஸ்ட் 8 ரன்களில் கார்த்திக் தியாகி ஓவரில் போல்டாகி வெளியேறினார். பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ப்ரித்வி ஷா மீண்டும் இந்த போட்டியிலும் சொதப்பினார். 12 பந்துகளை சந்தித்து 10 ரன்களில் ஒரு மோசமான ஷாட்டில் தூக்கி அடித்து கேட்ச்சாகி வெளியேறினார்.

 லோ ஆர்டர் ஏமாற்றம்

லோ ஆர்டர் ஏமாற்றம்

இதன் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவுட்டாக, கேப்டன் ரிஷப் பண்ட் முஸ்தாபிசூர் பந்தில் போல்டாகி வெளியேறினார். பிறகு ஓரளவு நம்பிக்கை கொடுத்த ஹெட்மயர் முஸ்தாபிசூர் பந்தில், 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். இதன் பிறகு, டெல்லி அணியால் மீண்டு வரவே முடியவில்லை. லோ ஆர்டரில் பெரிய ஹிட்டர்கள் இல்லாததால், அந்த அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 ராஜஸ்தானுக்கு வாய்ப்பு

ராஜஸ்தானுக்கு வாய்ப்பு

இந்த போட்டியில் வெற்றிப் பெற்றுவிட்டால், 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை டெல்லி உறுதி செய்துவிடலாம். இதனை மனதில் வைத்தே, அந்த அணி களமிறங்கியது. ஆனால், டெல்லி பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இப்போது வெறும் 154 ரன்கள் மட்டுமே இந்த அணி எடுத்துள்ளது. அபுதாபி பிட்சில் இந்த ரன்கள் போதுமானது கிடையாது. ராஜஸ்தான் வெற்றிப் பெற்றவே வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

Story first published: Saturday, September 25, 2021, 19:06 [IST]
Other articles published on Sep 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+