Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபியை பந்தாடிய ஃபில் சால்ட். கோலிக்கு பதிலடி கொடுத்த கங்குலி படை.. டெல்லி அபார ஆட்டம்

டெல்லி : ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தற்போது கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் 10 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

இதனால் எஞ்சிய 4 போட்டிகளில் டெல்லி அணி வென்றால் , பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியும் என்ற வாய்ப்பு உள்ளது. வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட் செய்தது. இதில் விராட் கோலி மெதுவாக விளையாடி அரைசதம் சேர்த்தார்.எனினும், இறுதியில் லோம்ரர் 26 பந்தில் அரைசதம் அடிக்க, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.

 Delhi capitals stunned RCB by 7 wickets and registered 4th win

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், ஆர்சிபி பந்துவீச்சை பொளந்தனர்.டேவிட் வார்னர் 14 பந்தில் 22 ரன்கள் சேர்க்க, பில் சால்ட் , ஆர்சிபி பந்துவீச்சை துவைத்தார். இதனால் 4.2வது ஓவரில் எல்லாம் டெல்லி அணி 50 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் தன் பங்கிற்கு 17 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.

மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். எனினும் தொடர்ந்து ஆர்சிபி வீரர்களின் பந்துவீச்சை அட்டாக் செய்ய, ஆர்சிபி வீரர் சிராஜ் ஏன் டா இவரை வம்பிழுத்தோம் என்றும் சோகத்தில் நின்றார். பில் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். இதில் 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும்.

 Delhi capitals stunned RCB by 7 wickets and registered 4th win

இதே போன்று ரூசோவ் 22 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து நல்ல ஆதரவு கொடுக்க, 16.4வது ஓவரில் எல்லாம் டெல்லி அணி 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த தோல்வியின் மூலம் விராட் கோலி தனது தொப்பியால் முகத்தை மூடி கொண்டார். தனது சொந்த மண்ணில் குடும்பத்தினர் முன் வெற்றி பெற வேண்டும் என நினைத்த கோலியின் ஆசை நிறைவேறவில்லை.

Story first published: Saturday, May 6, 2023, 23:22 [IST]
Other articles published on May 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+