Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பட்ட இடத்திலேயே படுதே..! டெல்லி அணிக்கு நிகழ்ந்த சோகம்.. ஐபிஎல் தொடரில் இப்படிலாமா நடக்கும்?

டெல்லி : நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி பரிதாபமான நிலையில் உள்ளது. எஞ்சி உள்ள 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் டெல்லி அணி உள்ளது.

டெல்லி அணியில் உள்ள வீரர்கள் யாரும் சரியான முறையில் விளையாடுவது இல்லை. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் சொதப்பி தோல்வியை தழுவுகிறார்கள். இதனால் நடந்ததெல்லாம் மறந்துவிட்டு புதியதாக ஆரம்பியுங்கள்.

Delhi capitals team kits worth of rs 10 lakhs is missing in transit

ஆக்ரோஷமாக விளையாடுங்கள் என்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லி அணியின் மெண்டர் கங்குலி பேசுகையில் 9 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற முடியும். தற்போது நமக்கு இழக்க ஒன்றும் இல்லை என்று கூறினார். ஆனால் டெல்லி அணிக்கு தற்போது சோகமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 13 ஆம் தேதி பெங்களூரில் விளையாடிவிட்டு மீண்டும் டெல்லி திரும்பிய டெல்லி அணி வீரர்களுக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. விமான நிலையத்தில் தங்களுடைய பேட் மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்கள் திருடு போய்விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.இதனை அடுத்து டெல்லி அணி நிர்வாகம் சார்பாக பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் டெல்லி விமான நிலைய அதிகாரிகள், போலீசார் ஆகியோர்களுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Delhi capitals team kits worth of rs 10 lakhs is missing in transit

இந்த இடத்தில் காணாமல் போன கிரிக்கெட் வீரர்களின் உபகரணங்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நாளை டெல்லி அணி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. ஆனால் கையில் பேட்டில் இல்லாமல் எப்படி விளையாடுவது என்ற இக்கட்டான நிலையில் டெல்லி அணி வீரர்கள் உள்ளனர். நடப்பு தொடரில் டெல்லி அணி வீரர்களுக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக உள்ளது.

Story first published: Wednesday, April 19, 2023, 17:53 [IST]
Other articles published on Apr 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+