Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் "வாத்தி கம்மிங்" பாடல்.. இறங்கி குத்தாட்டம் போட்ட ஷ்ரேயாஸ் ஐயர் (வீடியோ)

துபாய்: மாஸ்டர் படத்தின் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியினர் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

delhi capitals team shreyas iyer dance perform for vaathi coming song

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செம்.19ம் தேதி தொடங்குகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது.

மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் ஃப்ளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தமாக 12 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி தொடரில் 5 டபுள் ஹெட்டர்ஸ் நடந்து முடிந்துவிட்டதால், 2வது பாதி தொடரில் 7 டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என அனைத்து அணிகளும் இப்போது அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி புள்ளி பட்டியலில் சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தீபக் சாஹர், கரண் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், கே.எம்.ஆசிப் உள்ளிட்ட வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதமே துபாய்க்கு சென்று, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று (செப்.11) இரவு ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ஷர்துல் தாகூர் ஆகிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து துபாய் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் நேற்று இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

இது ஒருபுறமிருக்க, டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது புள்ளிப்பட்டியலில் டெல்லி தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் அந்த அணியின் வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட சிலர், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வரும் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வாத்தி கம்மிங் பாடல், மொழிகள் கடந்து பெரிய அளவும் ரீச் ஆனது. பலரும் இப்பாடலின் இசைக்கு நடனமாடி இணையதளங்களில் வீடியோ அப்லோட் செய்வதை காண முடிந்தது. வெளிநாட்டினர் கூட, இப்பாடலின் இசைக்கு ஸ்டெப்ஸ் போட்டு வீடியோக்களை வெளியிட்டனர். அந்தளவுக்கு அனிருத்தின் இசைக்கு ரீச் இருந்தது. இந்நிலையில், டெல்லி அணியின் வீரர்களும் இப்பாடலுக்கு நடனம் ஆடியிருக்கின்றனர்.

Story first published: Saturday, September 11, 2021, 17:02 [IST]
Other articles published on Sep 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+