
அகமதாபாத்தில் போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி அகமதாபாத்தில் துவங்கியுள்ளது. ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதி வருகின்றன. இந்த போட்டி ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 200வது போட்டி. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

4 வெற்றிகள்
இதுவரை தொடரில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றி கொண்டுள்ளன. இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் டான் கிறிஸ்டியன் மற்றும் நவ்தீப் சைனிக்கு பதிலாக ரஜத் பட்டிதார் மற்றும் டேனியல் சாம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். டேனியல் சாம்சின் அறிமுக போட்டி இது.

இஷாந்த் சர்மா சேர்ப்பு
இதேபோல கொரோனா காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ஆர் அஸ்வின் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா இணைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முக்கிய மாற்றம்
அகமதாபாத்தில் நேற்றைய தினம் முதல் போட்டிகள் நடைபெற துவங்கியுள்ளன. நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கிடையில் பனிப்பொழிவு பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டாவதாக ஆடிய கேகேஆர் அணி ரன்களை அடிக்க திணறியது. இதேபோல பௌலிங்கிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி சொதப்பியது.

மாற்றம் குறித்து எதிர்பார்ப்பு
இந்நிலையில் இன்றைய போட்டியிலும் பனிப்பொழிவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவதாக விளையாடும் அணி இதன்மூலம் பேட்டிங்கில் பிரச்சினையை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டியே டெல்லி அணி இன்றைய போட்டியில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











