ஐபிஎல்: ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
ஹைதராபாத்: ஐ.பி.எல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக வார்னர் 46 ரன்கள் எடுத்தார். தவான் 34 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.
இதன் பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.1 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 44, ரிஷப் 39, சாம்சன் 34, ரன்கள் எடுத்தனர்.
Story first published: Friday, May 13, 2016, 1:25 [IST]
Other articles published on May 13, 2016


Click it and Unblock the Notifications