Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னய்யா பேர் இது? டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணியின் பெயர் மாற்றம்.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்

நியூடெல்லி : ஐபிஎல் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணி உரிமையாளர்கள் அந்த அணியின் பெயரை மாற்றி உள்ளனர்.

டெல்லி அணியின் புதிய பெயர், "டெல்லி கேபிடல்ஸ்" (Delhi Capitals). இது என்ன ஒண்ணும் புரியாம ஒரு பெயர்!! என உங்களுக்கு தோன்றுகிறதா?

உங்களை மாதிரியே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் "டெல்லி கேபிடல்ஸ்" உருவான நொடி முதல் சிரித்து, கேலி செய்து "வைச்சு செய்வோம்" என முடிவெடுத்துள்ளார்கள்.

மோசமான பெயர் மாற்றம்

மோசமான பெயர் மாற்றம்

டெல்லி அணியின் உரிமையாளராக ஜே.எஸ்.டபுள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்ளது. டெல்லியின் சிறப்பையும், டெல்லி மக்களிடம் இன்னும் நெருக்கமாகவும் இருக்கும் வகையில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை மாற்றி "டெல்லி கேபிடல் என வைத்துள்ளோம் என கூறியுள்ளது அந்த நிறுவனம். அதாவது, டெல்லி இந்தியாவின் தலைநகரம். மற்ற எந்த ஐபிஎல் அணிக்கும் இந்த சிறப்பு இல்லை என்பதை தான் இப்படி பெயராக வைத்துள்ளார்கள். ஆனால், இது என்ன கண்றாவியான பெயர்? என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

மாற்றத்துக்கு என்ன காரணம்?

மாற்றத்துக்கு என்ன காரணம்?

பெயர் மாற்றத்துக்கு என்ன தான் அவசியம்? டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடந்த சில ஐபிஎல் தொடர்களில் ப்ளே-ஆஃப் முன்னேற முடியாமல் பட்டியலில் படு பாதாளத்தில் இருந்தது. கடந்த 2018இல் மிக மோசமான நிலையை எட்டியது. இதில் இருந்து மீள ஒரு புத்துணர்வை பெற வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது டெல்லி அணி.

புரியாத பெயர்

புரியாத பெயர்

அதனால், பெயர், லோகோ உட்பட அனைத்தையும் மாற்றி புதிய முகத்தை 2019 ஐபிஎல் முதல் காட்ட முடிவு செய்துள்ளது. இவர்கள் எண்ணம் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. ஆனால், நல்ல காலத்தை எதிர்நோக்கி இருக்கும் ஒரு அணிக்கு இப்படியா மொக்கை பெயரை, புரியாத பெயரை வைப்பார்கள்? ட்விட்டரில் இந்த பெயரை வைத்து அதகளம் செய்துள்ளார்கள்.

டெல்லி வாசிகளின் மூளை பாதிப்பு

டெல்லி அதிக காற்று மாசு உள்ள நகரமாக உள்ளது. அந்த காற்று மாசு டெல்லி மக்களின் மூளையை பாதித்து வருகிறது என்பதற்கு இப்படி புரியாமல் பெயர் வைத்துள்ளதே சான்று என்கிறார் இவர்.

அது கேபிடல் எழுத்துங்க!

இவர், புதிய பெயர் வைக்கும் போது பெயர் என்ன என கேட்டதற்கு டெல்லி, ஆங்கில கேபிடல் எழுத்துக்களில் (DELHI) என கூறி உள்ளனர். அதை புரிந்து கொள்ளாமல், டெல்லி கேபிடல் என்றே பெயர் வைத்து விட்டார்கள் என கிண்டல் செய்துள்ளார்.

புதிய ஸ்டாக் ப்ரோக்கர் உதயம்

கேபிடல் என்ற பெயரில் இருக்கும் நிறுவனங்கள் முதலீடு, நிதி மற்றும் ஸ்டாக் மார்க்கெட் ஆகியவை தொடர்பான சேவைகளில் ஈடுபடும். அது போல டெல்லியில் புதிதாக ஒரு ஸ்டாக் ப்ரோக்கர் வந்துள்ளார். அவர் பெயர் டெல்லி கேபிடல் என கலாய்த்துள்ளார்.

நாங்க மட்டும் என்ன தொக்கா?

டெல்லி நாட்டின் கேபிடல், என்பதால், டெல்லி கேபிடல் என வைத்து விட்டார்கள். அப்படி பார்த்தால் மும்பை நாட்டின் நிதி மற்றும் முதலீட்டில் முதல் இடத்தில் உள்ளது. அதனால், அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி "மும்பை பினான்சியல் கேபிடல்" என தன் பெயரை மாற்றும் என தான் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 5, 2018, 14:34 [IST]
Other articles published on Dec 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+