Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கய்யா குட்டி சச்சின் பிரித்வி ஷா? மொத்தமாக மாற்றப்பட்ட டெல்லி.. டாஸ் வென்ற வார்னர் பவுலிங் தேர்வு

கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது சீசனுக்கு 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி ஆடிய இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

Delhi won the Toss and elect to bowl against Rajasthan in IPL 2023

இந்த நிலையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் திருமணத்திற்காக சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரோவ்மன் பவல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் தொடக்க வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டு, மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த போட்டியில் சொதப்பிய சர்ஃபராஸ் கான் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணியில் பட்லர் காயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார். ஆனால் கடந்த போட்டியில் மோசமாக ஆடிய தேவ்தத் படிக்கல் நீக்கப்பட்டு, இம்பேக்ட் பிளேயராக சிறப்பாக ஆடிய துருவ் ஜுரேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கேரளா வீரர் ஆசிஃப் நீக்கப்பட்டு சந்தீப் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் அணி விவரம்: பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர், துருவ் ஜுரேல், அஸ்வின், ஜேசன் ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல்

டெல்லி அணி விவரம்: டேவிட் வார்னர், மனீஷ் பாண்டே, ரைலே ரூசவ், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல், நார்கியே, கலீல் அஹ்மத், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்

Story first published: Saturday, April 8, 2023, 15:14 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+