Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய சிறுமிக்கு பரிசளித்த வெ.இண்டீஸ் வீரர்.. போட்டிக்கு முன் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Recommended Video

இந்திய சிறுமிக்கு பரிசளித்த வெ.இண்டீஸ் வீரர்... நெகிழ்ச்சி சம்பவம்!

திருவனந்தபுரம் : மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் தேனேஷ் ராம்தின், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இடம்பெறாவிட்டாலும், ரசிகர்களின் மனதில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவுடனான சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டிக்கு செல்லும் வழியில் வீரர்களை பார்த்து 4 வயது சிறுமி ஒருவர் கையசைக்க, உடனடியாக பேருந்தை நிறுத்திய ராம்தின், அந்த சிறுமிக்கு போட்டியை காண 2 டிக்கெட்டுகள் மற்றும் பரிசளித்துள்ளார்.

மேற்கிந்திய வீரரின் இந்த செய்கை அங்கிருந்த ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

 2வது சர்வதேச டி20யில் வெற்றி

2வது சர்வதேச டி20யில் வெற்றி

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 வீரர்களை பார்த்து கையசைத்த சிறுமி

வீரர்களை பார்த்து கையசைத்த சிறுமி

முன்னதாக, போட்டியில் பங்கேற்பதற்காக பேருந்து மூலம் மைதானத்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், வழியில் அவர்களை பார்த்து 4 வயது சிறுமி கையசைத்துள்ளார்.

 இளம் ரசிகைக்கு பரிசு

இளம் ரசிகைக்கு பரிசு

இதையடுத்து பேருந்தை நிறுத்திய தேனேஷ் ராம்தின், அந்த சிறுமிக்கு போட்டியை காண்பதற்கான 2 டிக்கெட்டுகள் மற்றும் பரிசு ஒன்றையும் அளித்துள்ளார்.

தேனேஷூக்கு குவிந்த பாராட்டு

இதையடுத்து அங்கிருந்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தேனேஷூக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருந்தது. விண்டீஸ் கிரிக்கெட்டின் தளத்திலும் இந்த நிகழ்வு பதியப்பட்டிருந்தது.

 போட்டியில் இடம்பெறாத தேனேஷ்

போட்டியில் இடம்பெறாத தேனேஷ்

நிக்கோலஸ் பூரனுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதை அடுத்து அவர் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் பங்குபெற்றார். இதையடுத்து கடந்த வெள்ளியன்று நடைபெற்ற முதல் போட்டியில் பங்கேற்ற தேனேஷ் நேற்றைய போட்டியில் இடம்பெறவில்லை.

Story first published: Monday, December 9, 2019, 15:35 [IST]
Other articles published on Dec 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+