Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்க்கை மாற்றும் பணம் தந்தாலும் சரி.. எனக்கு அது தான் முக்கியம், ஐபிஎல்-ஐ உதறி தள்ளிய வீரர்

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இருந்து மார்க் வுட் கடைசி நேரத்தில் விலகியது சர்ச்சையான நிலையில், அதற்கான உண்மையான காரணத்தை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் நடக்க உள்ள 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. ஏலம் தொடங்கும் கடைசி நேரத்தில் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் தன் பெயரை நீக்கி விடுங்கள் எனத் தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தான் விலகியதற்கான உண்மையான காரணத்தை மார்க் வுட் உடைத்துள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

ஐபிஎல்-ல் 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் மார்க் வுட் களமிறங்கினார். அதன் பின்னர் அனைத்து போட்டிகளிலும் வெளியில் உட்காரவைக்கப்பட்டார். இதன் காரணமாகவே அவர் வெளியேறினார் என கூறப்பட்டது.

எது உண்மை

எது உண்மை

இது குறித்து பேசிய மார்க் வுட், இது கடைசி நொடியில் எடுத்த முடிவு, ஐபிஎல்-ல் பங்கேற்க எனக்கு விருப்பம் இல்லை. அங்கு எனக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். வாழ்க்கையையே மாற்றும் பணம் கிடைக்கு. இருந்தாலும் எனது முடிவில் நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நாடு தான் முக்கியம்

நாடு தான் முக்கியம்

நான் ஏற்கனவே 6 வாரங்கள் இந்திய தொடரில் இருந்து ஆட வேண்டும். ஐபிஎல்-ல் கலந்துக்கொண்டால் மேலும் ஒரு 8 வாரங்கள் இருக்க வேண்டும். இந்த கொரோனா நேரத்தில் என் குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிய முடியாது. அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு கவனம் செலுத்த போகிறேன் என மார்க் வுட் தெரிவித்துள்ளார்.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

மார்க் வுட் இதுவரை 18 டெஸ்ட், 53 ஒருநாள், 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மொத்தம் 135 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டிலும் ஆடி வருகிறார். ஐபிஎல் ஏலத்தில் இவரின் பெயர் 24வது இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ரூ.2 கோடி இவருக்கு ஆரம்ப தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Story first published: Sunday, February 21, 2021, 8:18 [IST]
Other articles published on Feb 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+