Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ஆட்டத்தில் தோல்வி... ஆனாலும் பிளே ஆப் நுழைந்தது காரைக்குடி... தூத்துக்குடி வெளியேறியது!

Recommended Video

பிளே ஆப் நுழைந்தது காரைக்குடி...தூத்துக்குடி வெளியேறியது!- வீடியோ

திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசனில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி அணியிடம் காரைக்குடி தோல்வியடைந்தது. இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் தூத்துக்குடி வெளியேறியது

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணியும், ஐடிரீம்ஸ் காரைக்குடி காளை அணியும் மோதின.

despite lost in the last league idreams karaikudi kaalai enters play off of tnpl

இதில் முதலில் விளையாடிய காரைக்குடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. ஆர். ஸ்ரீனிவாசன் ஆட்டமிழக்காமல் 46, வி.ஆதித்யா 37, அனிருத்தா 28 ரன்கள் எடுத்தனர்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்

அடுத்து விளையாடிய தூத்துக்குடி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஆர். சதீஷ் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். ஆனந்த் சுப்பிரமணியம் 32, எஸ். தினேஷ் 23, கவுசிக் காந்தி 21 ரன்கள் எடுத்தனர்.

புள்ளி பட்டியல்

இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வென்றது. தூத்துக்குடி மற்றும் காரைக்குடி அணிகள் 7 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்றிருந்தன. இதைத் தவிர கோவை மற்றும் திருச்சி அணிகளும் 8 புள்ளிகளுடன் இருந்தன.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

ரன் ரேட் அடிப்படையில் கோவை மற்றும் காரைக்குடி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. ஏற்கனவே திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வென்றது. காஞ்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. திருச்சி 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வென்றது.

Story first published: Monday, August 6, 2018, 10:24 [IST]
Other articles published on Aug 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+