For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

படிக்கல்லுக்கு கொரோனா நெகட்டிவ்... சாம்ஸ்க்கு பாசிட்டிவ்... அடுத்தடுத்த சிக்கலில் ஆர்சிபி

சென்னை : ஆர்சிபி அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கடந்த மாதம் 22ம் தேதி கொரோனா பாதித்தது.

இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு இரு முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் அதையடுத்து அவர் தற்போது அணியில் இணைந்துள்ளதாகவும் ஆர்சிபி தெரிவித்துள்ளது.

கோப்பைக்கு ஆர்சிபி தீவிரம்

கோப்பைக்கு ஆர்சிபி தீவிரம்

ஐபிஎல் 2021 தொடரில் கோப்பையை கைப்பற்ற ஆர்சிபி தீவிரம் காட்டி வருகிறது. அணியின் துவக்க வீரராக களமிறங்கவுள்ளதாக அணியின் கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் துவக்க வீரராக அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்திய வீரர்

தனிமைப்படுத்திய வீரர்

அவருடன் அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் இணைந்து விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த மாதம் 22ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து தனது வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

பயிற்சி முகாமில் இணைந்த படிக்கல்

பயிற்சி முகாமில் இணைந்த படிக்கல்

இந்நிலையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இரு வாரங்கள் கழிந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட அடுத்தடுத்த இரு கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து அவர் அணியின் பயிற்சி முகாமில் மீண்டும் இணைந்துள்ளார்.

படிக்கல் வீடியோ பகிர்வு

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்சிபி அணி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் படிக்கல்லின் வீடியோவையும் ஷேர் செய்துள்ளது. அதில் அவர் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தான் தற்போது நலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே அந்த அணியின் ஆல்-ரவுண்டர் டேனியல் சாம்சிற்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, April 7, 2021, 14:36 [IST]
Other articles published on Apr 7, 2021
English summary
RCB suffered a blow ahead of their first game of the season as their Australia international Daniel Sams contracted the coronavirus
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X