Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குவாரன்டைன்ல இருக்காரு படிக்கல்... சீக்கிரமே அணியில சேர்வாருன்னு ஆர்சிபி நம்பிக்கை

சென்னை : கடந்த மார்ச் 22ம் தேதி ஆர்சிபி துவக்க வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அதுமுதல் தனது பெங்களூரு வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் படிக்கல் கூடியவிரைவில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட்டை பெற்று அணியின் பயோ பபளில் இணைவார் என்று ஆர்சிபி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

படிக்கல்லுக்கு கொரோனா

படிக்கல்லுக்கு கொரோனா

ஐபிஎல் 2021 தொடருக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அணி வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் பெற்று வருகின்றனர். ஆர்சிபியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கலுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சீசனில் துவக்க வீரராக களமிறங்கவுள்ள விராட் கோலியுடன் யார் துவக்க வீரராக இணைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனிமைப்படுத்திக் கொண்ட படிக்கல்

தனிமைப்படுத்திக் கொண்ட படிக்கல்

கடந்த 22ம் தேதி தேவ்தத் படிக்கல்லுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ஆர்சிபி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

ஆர்சிபியில் இணைவார்

ஆர்சிபியில் இணைவார்

அவருக்கு கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்தவுடன் அவர் ஆர்சிபியின் பயோ பபளில் இணைவார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆர்சிபியின் மருத்துவ குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வரிசையில் 3 வீரர்கள்

வரிசையில் 3 வீரர்கள்

அவர் மீண்டும் அணியில் இணைவதற்காக ஆர்சிபி காத்திருப்பதாகவும் ஆர்சிபி தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஆர்சிபி தனது முதல் போட்டியை வரும் 9ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள நிலையில், படிக்கல்லுக்கு பதிலாக அசாருதீன், ஆலன் ஃபின், ரஜத் படிடார் ஆகியோருக்கு துவக்க வீரராக வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, April 5, 2021, 18:20 [IST]
Other articles published on Apr 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+