Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சன்ரைசர்ஸ்-ஐ வற்புறுத்தி டெல்லி டேர்டெவில்ஸ்க்கு தாவிய தவான்.. இந்த டீல் தான் காரணமா?

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நீண்ட காலமாக ஆடி வந்த ஷிகர் தவான், சில தினங்கள் முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.

2019 ஐபிஎல் தொடருக்கான அணி வீரர்கள் மாற்றங்கள் செய்ய குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதை பயன்படுத்தி சில அணிகள் சில வீரர்களை விடுவித்தும், விற்றும், வாங்கியும் வருகின்றனர்.

பின்னணியில் ஒரு டீல் இருக்கு

பின்னணியில் ஒரு டீல் இருக்கு

அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னணி வீரர் ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விற்றுள்ளது சன்ரைசர்ஸ். அதன் பின்னணியில் தவான் பேசிய ஒரு "டீல்" இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏமாற்றம் அடைந்தார்

ஏமாற்றம் அடைந்தார்

சன்ரைசர்ஸ் அணி சென்ற ஐபிஎல் ஏலத்தில் தவானை தக்க வைக்கவில்லை. மாறாக டேவிட் வார்னர் மற்றும் புவனேஸ்வர் குமாரை தக்க வைத்தது. தவானை வேறு அணி 5.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்த பின்னர் அவரை "ரைட் டூ மேட்ச்" என்ற வாய்ப்பை பயன்படுத்தி வாங்கிக் கொண்டது. அதனால், முந்தைய ஏலத்தில் 12.5 கோடிக்கு ஏலம் போன தவான், சென்ற முறை 5.2 கோடி மட்டுமே பெற்று ஏமாற்றம் அடைந்துள்ளார்.

பஞ்சாப் சொன்ன டீல்

பஞ்சாப் சொன்ன டீல்

இதனால், சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் மீது கோபத்தில் இருந்துள்ளார் தவான். மனக்கசப்போடு இருந்த தவான் மற்ற ஐபிஎல் அணிகளோடு தன்னை விலை பேசி வந்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப் அணிக்கு தாவினால் தற்போது உள்ள விலையை விட கூடுதலாக ஒரு கோடி கிடைக்கும் என ஒரு டீல் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தாரை வார்த்துள்ளது சன்ரைசர்ஸ்

தாரை வார்த்துள்ளது சன்ரைசர்ஸ்

அதே சமயம் டெல்லி அணி மொத்தமாக 7 கோடி கொடுக்க தயாராக இருப்பதாக கூறியதால், தன்னை டெல்லி அணிக்கு விற்று விடுமாறு தவான் சன்ரைசர்ஸ் அணியிடம் கூறியதாக தெரிகிறது. தவானை இனியும் அணியில் வைத்து சமாளிப்பது கடினம் என நிலையில், வேறு வழியில்லாமல் அவரை டெல்லி அணிக்கு தாரை வார்த்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

பணம் தான் பிரதானம்

பணம் தான் பிரதானம்

ஐபிஎல் விதிகள் படி தவான் இந்த கூடுதல் விலையைப் பெற முடியுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை விளம்பர வாய்ப்புகள் உள்ளிட்டவை மூலமாக இந்த பணம் தவானை சென்றடைய வாய்ப்புள்ளது. ஆக மொத்தத்தில், ஐபிஎல் என்றால் பணம் தான் பிரதானம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

Story first published: Friday, November 9, 2018, 14:34 [IST]
Other articles published on Nov 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+