Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆயிரம் தான் இருந்தாலும் 'சிஎஸ்கே'வின் மஞ்சா கலரு டிசர்ட் போல இல்ல: டோணி ஃபீலிங்

மும்பை: என்ன தான் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற டிசர்ட்டை மிஸ் பண்ணுவதாக கிரிக்கெட் வீரர் டோணி தெரிவித்துள்ளார்.

பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் பிரச்சனையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் துவங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த டோணி தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.

இந்நிலையில் அவர் சென்னை அணி குறித்து கூறுகையில்,

மஞ்சள்

மஞ்சள்

புனே அணிக்காக பயிற்சி செய்தபோது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டியின்போது மஞ்சள் நிற உடை அணியாமல் இருந்தது ஏதோ மாதிரி இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் 8 ஆண்டுகளாக மஞ்சள் உடை அணிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளேன்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

மஞ்சள் நிற உடை அணியாமல் விளையாடியது எமோஷனலாக இருத்தது. ஆனால் ஒரு விளையாட்டு வீரராக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எவ்வளவு உழைத்தேனோ அதே அளவுக்கு புனே அணிக்காகவும் உழைப்பேன்.

அஸ்வின்

அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சிறந்த வீரர். பலமுறை எங்கள் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது காப்பாற்றியுள்ளார். என்னையும் தான். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்.

முருகன் அஸ்வின்

முருகன் அஸ்வின்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முருகன் அஸ்வின் சிறப்பாக விளையாடினார். போட்டியை பார்த்த உங்களுக்கே தெரிந்திருக்கும். அவரை நான்கு ஓவர்கள் பந்து வீசவிட்டதற்கு காரணம் உள்ளது. எதிர்காலத்தில் அவரை விக்கெட் ஸ்பெஷலிஸ்ட்டாக பார்க்க விரும்புகிறேன் என்றார் டோணி.

Story first published: Tuesday, April 12, 2016, 15:13 [IST]
Other articles published on Apr 12, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+