Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. டோணியை கொண்டாடும் ரசிகர்கள்

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை அணிக்கு டோணி மீண்டும் வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டோணியின் வருகையையும், சென்னையின் சூப்பர் கிங்ஸின் வருகையையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த செய்தி வந்த இரண்டு நாட்களாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

சென்னை அணிக்கு மொத்தம் ஐந்து வீரர்கள் திரும்புவார்கள் என்பதால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர். ஐபிஎல் ரசிக சண்டை இப்போதே உச்சம் தொட்டு இருக்கிறது.

திரும்ப வந்துட்டோம்

திரும்ப வந்துட்டோம்

சிஎஸ்கே அணிக்கு ஐபிஎல்லில் இருந்து 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2017 ஐபிஎல் வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் விளையாட முடியாமல் போனது. இந்த நிலையில் சிஎஸ்க்கே , ராஜஸ்தான் அணி மீதான தடை காலம் முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு அணிகளும் 2018 ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடும். மேலும் சென்னை அணிக்காக டோணி விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. டோணியுடம் இன்னும் 4 பேர் அணியில் சேர்வார்கள்.

சண்டை தொடங்கியது

ஐபிஎல்லில் எப்போது மும்பை அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே அணி சிஎஸ்கே மட்டும் தான். ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது இரு மாநில ரசிகர்களும் மிகவும் உக்கிரமாக சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே திரும்பி வந்துள்ளதால் மும்பை ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். ரோஹித சர்மா தலைமையில் சென்னையிடம் மும்பை தோற்று போன போட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு ''உடம்ப பார்த்துக்கோங்க'' என்று ரஜினி டயலாக்கை வைத்துள்ளனர்.

எங்களுக்குத்தான்

இவரும் அதேபோல் கபாலி பட வசனத்தை எழுதியுள்ளார். அதில் ''வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. எப்படியும் 2018 ஐபிஎல் கோப்பை எங்களுக்குத்தான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இனி இங்கதான்

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் வருகையை ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹேய்டனும் கொண்டாடி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் டிவிட்டுக்கு அவர் ரிப்ளே செய்துள்ளார். அதில் "நான் இங்கதான் இருக்கேன்'' என்று கூறியுள்ளார். ரசிகர்கள் அவரை ''என்னை சென்னையிலேயே செட்டில் ஆகுற ஐடியால இருக்கீங்களா?'' என்று கேட்டுள்ளனர்.

சின்ன தல வாழ்க

எல்லோரும் எப்படி டோணியை கொண்டாடுகிறார்களோ அதேபோல் ரெய்னாவையும் கொண்டாடி வருகின்றனர். அதில் ''டோணி எங்களுக்கு தலைனா நீங்கதான் எங்களுக்கு சின்ன தலை. டோணி-ரெய்னா ஜோடியை களத்துல பார்க்க ஆர்வமா இருக்கோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுக்க டிரெண்ட்

உலகம் முழுக்க டிரெண்ட்

இந்த நிலையில் இந்த செய்தி இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுக்க டிரெண்ட் ஆகி இருக்கிறது. பாகிஸ்தான் ரசிகர்கள், ஆஸ்திரேலிய ரசிகர்கள், மேற்கிந்திய தீவுகளின் ரசிகர்கள் என பலர் சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்தும், டோணி குறித்தும் எழுதி வருகின்றனர். மேலும் சென்னைக்கும், டோணிக்கும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பந்தம் இருப்பதாகவும் எழுதியுள்ளனர்.

Story first published: Friday, December 8, 2017, 9:52 [IST]
Other articles published on Dec 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+