Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோடிக்கு அடுத்த இடத்தில் தோனி.. சச்சின், கோலியை விட உச்சத்தில்.. வெளியான அந்த பட்டியல்!

Recommended Video

மோடிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தோனி | MS Dhoni 2nd most admired man in India

டெல்லி : இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் தோனி இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடி முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் மூத்த வீரருமான தோனி.

இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருக்கும் விளையாட்டு வீரர்களில் சச்சின், விராட் கோலி ஆகியோரை எல்லாம் முந்தி இருக்கிறார் தோனி.

உலக அளவில் சர்வே

உலக அளவில் சர்வே

2019ஆம் ஆண்டுக்கான அதிகம் போற்றப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்வேவை வெளியிட்டுள்ளது யுகோவ் (YouGov) என்ற நிறுவனம். இந்த சர்வே நாடுகள் வாரியாகவும், உலக அளவிலும் சுமார் 42,000 மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மோடி

இந்திய அளவில் மோடி

இந்தப் பட்டியலில் இந்தியர்களால் அதிகம் போற்றப்படும் ஆண்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் இடம் பிடித்துள்ளார். அவர் 15.56 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தோனி இரண்டாம் இடம்

தோனி இரண்டாம் இடம்

அவருக்கு அடுத்த இடத்தில் தோனி இருக்கிறார். தோனி 8.58 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்கிறார். தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்பது குறித்து பலரும் பேசி வரும் நிலையில், தோனி இந்தியர்களால் அதிகம் போற்றப்படும் பட்டியலில் உச்சத்தில், மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்து இருக்கிறார்.

சச்சின், கோலி எந்த இடம்?

சச்சின், கோலி எந்த இடம்?

இந்தப் பட்டியலில் மற்ற இரு முக்கிய கிரிக்கெட் வீரர்கள் ஆன சச்சின் டெண்டுல்கர் (5.81 சதவீதம்) ஏழாம் இடமும், விராட் கோலி (4.46 சதவீதம்) எட்டாம் இடமும் மட்டுமே பிடித்துள்ளனர்.

தோனி ரசிகர்கள்

தோனி ரசிகர்கள்

தன் கிரிக்கெட் வாழ்வின் உச்சகட்டத்தில் இருக்கும் கோலியை விட ஓய்வுக்கு அருகே இருக்கும் தோனி அதிக இந்தியர்களை ஈர்த்துள்ளார். அதற்கு முக்கிய காரணம், தோனி மீது எல்லை கடந்த அன்பு கொண்ட ரசிகர்கள் தான்.

பெண்கள் பட்டியல்

பெண்கள் பட்டியல்

இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் பெண்கள் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதல் இடத்தை பிடித்துள்ளார். கிரண் பேடி இரண்டாம் இடமும் பிடித்துள்ளார். லதா மங்கேஷ்கர் மூன்றாம் இடம் பிடித்து உள்ளார். முதல் நான்கு இடங்களில் எந்த நடிகையும் இடம் பெறவில்லை.

பெண்கள் பட்டியல்

பெண்கள் பட்டியல்

இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் பெண்கள் பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதல் இடத்தை பிடித்துள்ளார். கிரண் பேடி இரண்டாம் இடமும் பிடித்துள்ளார். லதா மங்கேஷ்கர் மூன்றாம் இடம் பிடித்து உள்ளார். முதல் நான்கு இடங்களில் எந்த நடிகையும் இடம் பெறவில்லை.

உலக அளவில் முதல் இடம்

உலக அளவில் முதல் இடம்

உலக அளவில் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பில் கேட்ஸ் முதல் இடத்திலும், பராக் ஒபாமா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பராக் ஒபாமா பதவியில் இல்லை என்றாலும், இந்தப் பட்டியலில் பலரை முந்தி இருக்கிறார்.

மூன்று சீனர்கள்

மூன்று சீனர்கள்

நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் இடங்களில் ஜாக்கி சான், சீன அதிபர் ஸி ஜின்பிங், தொழில் அதிபர் ஜாக் மா உள்ளனர். மூன்று இடங்களை சீனர்கள் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு முதல் ஐந்து இடங்களில் எந்த மாற்றமும் இல்லை.

மோடி எந்த இடம்?

மோடி எந்த இடம்?

இந்திய பிரதமர் மோடி இந்தப் பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு எட்டாம் இடத்தில் இருந்த அவர், இந்த ஆண்டு இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.

மற்ற இந்தியர்கள்

மற்ற இந்தியர்கள்

உலக அளவிலான பட்டியலில் மோடியை தவிர்த்து, முதல் இருபது இடங்களில் அமிதாப் பச்சன் (12ஆம் இடம்), ஷாரூக் கான் (16ஆம் இடம்), சல்மான் கான் (18ஆம் இடம்) மட்டுமே உள்ளனர். முதல் இருபது இடங்களில் ஒரு கிரிக்கெட் வீரர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, September 26, 2019, 11:07 [IST]
Other articles published on Sep 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+