கல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா? இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க
Recommended Video

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி திருமணத்திற்கு வரன் பார்த்துத் தரும் ஒரு இணைய நிறுவனத்துடன் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
தோனி கிரிக்கெட் வாழ்வில் கிட்டத்தட்ட தன் கடைசி காலத்தில் இருக்கிறார். 2019 உலகக்கோப்பை தான் அவரது கடைசி கிரிக்கெட் தொடர் என்ற முடிவுக்கு பிசிசிஐ முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வந்துவிட்டனர். டி20 அணியில் இருந்து கூட தோனி சமீபத்தில் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், கிரிக்கெட் வாழ்வு சுருங்கி வந்தாலும், விளம்பர வாய்ப்புகள் தோனிக்கு பெருகி வருகின்றன. அதையொட்டி இந்த புதிய விளம்பர வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
[ஏங்க.. பந்து பேட்லையே படலை.. இது அவுட்டா? கடுப்பான கம்பீர்.. இவருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?]

எனக்கு மகிழ்ச்சி
தான் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பது பற்றி கூறிய தோனி, "இணையத்தில் முன்னணியில் இருக்கும் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி" என கூறியுள்ளார்.

நிர்வாகக் கூட்டத்தில் தோனி
சமீபத்தில் தோனி இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகக் கூட்டத்தில் கலந்து கொண்டதும் முக்கியமான நிகழ்வாகும். தோனி இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆட உள்ள நிலையில், ஓய்வு நேரங்களில் அலுவலக பணியில் கூட ஈடுபடலாம் என கூறப்பட்டது.

வரன் பார்த்துக் கொடுப்பார் தோனி
அதை தொடர்ந்து இப்போது புதிய விளம்பர வாய்ப்புகளும் அவரை நோக்கி படையெடுத்து வருகின்றன. இனி விரைவில் தோனி கல்யாணத்திற்கு வரன் பார்த்து கொடுக்கப் போகிறார் என மீம்ஸ்கள் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசியலில் தோனி?
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. தோனி கிரிக்கெட்டை விட்டு ஓய்வு பெற்றாலும், மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கும். ஏற்கனவே, அவரை அரசியலுக்கு இழுக்க சில முயற்சிகள் நடந்து வருவதாக செய்திகள் கசிந்தன. தேர்தல் சமயத்தில் தோனி அரசியல் தூதராக "அந்த" கட்சிக்கு பிரச்சாரம் செய்வார் என செய்தி வந்தாலும் வரலாம்.


Click it and Unblock the Notifications