Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரரையே மறந்த தோனி.. ரசிகர்கள் கிண்டல்.. இதுக்கு தான் தோனி கெத்து.. அடிச்சிக்க எவனும் இல்ல

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே இன்று புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ள டெல்லி அணியை எதிர்கொள்கிறது. பொதுவாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்யும்.

ஏன் தோனி கூட அதனை தான் செய்து வந்தார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார். இதற்கு பின்னால் பெரும் காரணம் ஒன்று இருக்கிறது. சென்னை ஆடுகளம் மிகவும் தொய்வாக இருக்கும் .

Dhoni Brilliant decision at toss and forgets main player in playing xi

இங்கு தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மட்டும் இது ஆறாவது போட்டி ஆகும். இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது பந்து பேட்டிங்கிற்கு வரவே வராது இது பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். இதனை அறிந்த தோனி இன்று டாசை வென்று முதலில் பந்துவீச்சை செய்வதாக அறிவித்தார்.

இதன் காரணமாக சிஎஸ்கே அணி ஒரு 160 ரன்கள் அடித்தால் கூட பிறகு களம் இறங்கி விளையாடும் டெல்லி அணி அந்த இலக்கை எட்டுவது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் எந்த அணி பவர் பிளேவில் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. சிஎஸ்கே அணி எப்போதும் பேட்டிங் செய்யும்போது அம்பத்தி ராயுடுவை பிளேயிங் லெவனில் வைத்துவிட்டு, ஏதேனும் இந்திய பந்துவீச்சாளரை மாற்றுவார்கள்.

ஆனால் தற்போது இன்றைய ஆட்டத்தில் தோனி பதிரானாவை வெளியே உட்கார வைத்து அம்பத்தி ராயுடுவை சேர்த்து இருக்கிறார். இது இரண்டும் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக கருதப்படுகிறது. எனினும் இது தாக்கத்தை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது ஆட்டம் முடிந்த பிறகு தெரியவரும். மேலும் டாஸ் வீசும்போது தோனி சிவம் துபே இன்று விளையாடவில்லை என்பது போல் கூறினார். ஆனால் சிவம் துபே பெயர் இருந்தது. இதனால் தோனியே டாசின் போது வீரர்களின் பெயரை மறந்துவிட்டார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, May 10, 2023, 20:04 [IST]
Other articles published on May 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+