For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

படு பிரம்மாண்டமாக.. புனேவில் புதிய வீடு.. கோடிகளில் வாங்கிக் குவித்த தோனி

மும்பை: இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, புனேவில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு தோனி முழுமையாக ஓய்வுப் பெற்றார். 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் தோல்விக்கு பிறகு, எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடாமல் இருந்து வந்த தோனி, கடந்த ஆண்டு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஓய்வினை அறிவித்தார்.

எனினும், அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

பிளே ஆஃப் செல்லாமல்

பிளே ஆஃப் செல்லாமல்

2020 ஐபிஎல் சீசனில், முதன் முறையாக பிளே ஆஃப் செல்லாமல், தொடரை விட்டு வெளியேறியது தோனி தலைமையிலான சிஎஸ்கே. அனைத்து சீசனிலும், பிளே-ஆஃப் சென்ற ஒரே அணி சிஎஸ்கே தான். ஐபிஎல் வரலாற்றிலேயே, வேறு எந்த அணியும் இத்தகைய சாதனையைப் படைத்ததில்லை. எனினும், 2021 ஐபிஎல் சீசனில், முரட்டுத் தனமாக காம்பேக் கொடுத்த சென்னை, 7 போட்டிகளில் 5ல் வெற்றிப் பெற்று செமத்தியான ரன் ரேட்டுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

என்ன 'பிராசஸ்'?

என்ன 'பிராசஸ்'?

இம்முறை பிளே ஆப் செல்லும் அணிகளில் நம்பர்.1 அணியாக சிஎஸ்கே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தோனி என்ன 'பிராசஸ்' கையாண்டாரோ.. தெரியவில்லை. கடந்த சீசனுக்கு அப்படியே நேர்மாறாக விளையாடியது சிஎஸ்கே. போன சீசன் தோற்ற போதும், அதே புன்சிரிப்பை வெளிப்படுத்திய தோனி, இப்போது வெற்றியின் போதும், அதே மில்லி மீட்டர் சிரிப்பையே வெளிப்படுத்தினார்.

புதிய வீடு

புதிய வீடு

எனினும், ஐபிஎல் தொடரில் கொரோனா புகுந்து விளையாட, இப்போது செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும், சிஎஸ்கே கடந்த ஆண்டு சொதப்பிய அமீரகத்தில் தான். சர்வதேச போட்டிகளில் விளையாடாததால், தொடர் ஓய்வில் இருக்கும் தோனி, மீண்டும் ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில், புனேவில் தோனி ஒரு புதிய வீட்டினை வாங்கியுள்ளார்.

ராவெத் பகுதியில்

ராவெத் பகுதியில்

ஐபிஎல் தொடரில், இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போது, புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக தோனி விளையாடினார். இதில், முதல் ஆண்டில் தோனி தலைமையிலான புனே அணி, பிளே ஆஃப் செல்லாமல் வெளியேற, அடுத்த ஆண்டு தோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய அந்த அணி நிர்வாகம், ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது. இந்த நிலையில், ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கியிருக்கும் தோனி, இப்போது புனேவில் பிரம்மாண்டமாக புதிய வீட்டை வாங்கியிருக்கிறார். புனேவின் ராவெத் பகுதியில் உள்ள Estado Presidential societyயில் தான் தோனி வீடு வாங்கியிருக்கிறார்.

Story first published: Wednesday, June 2, 2021, 11:40 [IST]
Other articles published on Jun 2, 2021
English summary
Dhoni buys new home in Pune after Mumbai - தோனி புதிய வீடு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+