கேக் வெட்டிமட்டுமல்ல, மரத்தை நட்டு பிறந்த நாள் கொண்டாடிய டோணி
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் ஒரு நாள் போட்டியின் கேப்டன் டோணி நேற்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, டோணிக்கு, கிரிக்கெட் நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
சென்னையில் டோணி ரசிகர்கள் ரத்த தானம் செய்து தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வாழ்த்து மழையில் நனைந்த தோனி, நேற்று தனது பிறந்த நாளில், பண்ணை வீட்டில் மரம் நட்டு தனது பிறந்த நாளை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார்.
Story first published: Friday, July 8, 2016, 18:20 [IST]
Other articles published on Jul 8, 2016


Click it and Unblock the Notifications