Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆண்டர்சன் மீது நடவடிக்கை எடுக்காத ஐசிசி மீது டோணி கடும் கோபம்

லண்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது இந்திய கிரிக்கெட் அணி. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டின் 2வது நாள் உணவு இடைவேளையின் போது, இந்திய பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜாவுடன் வாக்குவாதம் செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் அவரை திட்டி, தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்து கொண்டார்.

டோணி குற்றச்சாட்டு

டோணி குற்றச்சாட்டு

ரவீந்திர ஜடேஜா எந்த வித தவறும் செய்யவில்லை, ஆண்டர்சன் தான் அவரை வம்புக்கு இழுத்தார் என்று இந்திய கேப்டன் டோணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்திய அணி நிர்வாகம் ஆண்டர்சன் மீது நடத்தை விதி லெவல்-3-ஐ மீறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்தது. அது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷனராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கார்டன் லீவிஸ் நியமிக்கப்பட்டார்.

தவறில்லை என தீர்ப்பு

தவறில்லை என தீர்ப்பு

கடந்த 1ம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய கார்டன் லீவிஸ், இருவர் மீதும் தவறில்லை என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் சஞ்சய் பட்டேல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சனுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

ஐசிசி மறுப்பு

ஐசிசி மறுப்பு

ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேல் முறையீட்டை சர்வதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்ததுவிட்டது. ஜடேஜா- ஆண்டர்சன் மோதல் விவகாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஐசிசி மறுத்து விட்டது.

கருத்தில் மாற்றம் இல்லை

கருத்தில் மாற்றம் இல்லை

இதுகுறித்து கேப்டன் டோணி கருத்து கூறுகையில், "இந்த விவகாரத்தில் முதலில் நான் என்ன சொன்னேனோ அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எனது அணி வீரர் தவறும் ஏதும் செய்யாத நிலையில் அவருக்கு அபராதம் விதித்தால், அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தான் செய்வேன். ஆனால் அதே வீரர் எல்லை தாண்டி நடந்து கொண்டால், அவரின் பின்னால் நான் நிற்க மாட்டேன்.

தப்பு தப்புதான்..

தப்பு தப்புதான்..

தவறு எந்த அணி வீரர் செய்திருந்தாலும் அதை தவறு என்றுதான் நான் கூறுவேன். வீட்டில் பிள்ளைகளை டிவியில் கிரிக்கெட் பார்க்க கூடாது என்று சொல்வதை கூட விளையாட்டுக்கு எதிரான அவமரியாதையாக நினைப்பவன் நான்". இவ்வாறு டோணி கூறினார்.

Story first published: Thursday, August 7, 2014, 10:19 [IST]
Other articles published on Aug 7, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+