இதுதான் நான்.. இதுதான் என் ஊர்.. எல்லா டீம்லயும் கூப்பிட்டாங்க.. ஆனா சிஎஸ்கேதான் என் சாய்ஸ்- டோணி
சென்னை: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் 2000க்குப் பின் தத்து எடுத்துக் கொண்ட செல்ல பிள்ளை டோணி. டோணி பிறந்த ராஞ்சியில் கூட அவருக்கு இவ்வளவு மதிப்பு இருக்குமா என்று தெரியாது.
கபாலி படத்தில் ''நான் இல்லாம எப்படி இருந்த?'' என ரஜினி கேட்பதற்கு ராதிகா ஆப்தே '' இவ்வளவு நாள் செத்துதான் இருந்தேன். உன்னை பார்க்குற வரைக்கும்'' என்று பதில் சொல்வார். சிஎஸ்கே ரசிகர்களும் அப்படித்தான் சென்னை அணி இல்லாமல் இருந்தனர். 2 வருடம் ஐபிஎல் போட்டியே பார்க்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் சென்னைக்கு திரும்பிய கதையை டோணி கூறியிருக்கிறார். ஐபிஎல்லில் இத்தனை அணி இருக்கும் போது சென்னையை தேர்ந்தெடுத்தது ஏன் என்று கூறியுள்ளார்.

மோசமான காலம்
சென்னை அணி ஐபிஎல்லில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அப்படியே குறைந்தது. புனே அணியிலும் டோணி சரியாக நடத்தப்படாமல் இருந்தார். கேப்டனாக இருந்த டோணியை பதவியில் இருந்து கீழே இறக்கி அவமானப்படுத்தினார்கள்.

திரும்பி வந்த சிஎஸ்கே
ஆனால் சென்ற வருடம் பாதியில் சென்னை அணி மீண்டும் விளையாடும் என்று கூறப்பட்டது. 2018 ஐபிஎல் போட்டியில் சென்னை கண்டிப்பாக விளையாடும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனால் அப்போதே சென்னை ரசிகர்கள் உற்சாக மிகுதிக்கு சென்றார்கள்.

மீண்டும் வந்தது
சென்னை வந்தது சந்தோசம் என்றால் டோணி வந்தது இரண்டு மடங்கு சந்தோசத்தை அணிக்கு கொடுத்தது. டோணியுடன் ஜடேஜா, சின்ன தல ரெய்னா ஆகியோரும் அணிக்கு திரும்பினார்கள். மேலும் கண்டிப்பாக அஸ்வினை அணியில் எடுப்போம் என்றும் உறுதியளித்து இருக்கிறார்கள்.

எல்லா அணியும்
இந்த நிலையில் இந்த ஐபிஎல்லில் சென்னைக்கு அணிக்கு வருவதற்கு முன் டோணியிடம் பலர் பேசி இருக்கிறார்கள். கிட்டதட்ட எல்லா அணியும் டோணியை தங்கள் அணிக்கு கூப்பிட்டு இருக்கிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டோணி இதை கூறியுள்ளார். சிலர் அணிக்கு கேப்டனாகவும் கூப்பிட்டு இருக்கிறார்கள்.

சென்னைக்கு வந்தேன்
ஆனால் சென்னை தவிர வேற எந்த அணி குறித்தும் யோசிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். எந்த அணி கொடுத்த வாய்ப்பையும் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்று கூறியுள்ளார். சென்னை அணிக்கு எந்த ஓனர் வந்தாலும் சரி நான் அந்த அணிக்குத்தான் செல்வேன். மஞ்சள் நிற உடைதான் அணிவேன் என்று உறுதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

காரணம்
இதற்கான காரணம் என்ன என்றும் அவர் கூறியுள்ளார். அதில் ''சென்னை மக்கள் என்னை அவர்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டார்கள். என்னை எப்போதும் கொண்டாடினார்கள். புனேவில் நான் இருந்தேன் என்பதற்காக அந்த அணிக்கு சப்போர்ட் செய்தார்கள். இப்படி இருக்கும் மக்களை விட்டு எப்படி செல்ல முடியும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications