இது கவாஸ்கரின் 'கனவு'.. அதில் டோணிக்கும் இடம் உண்டு!
டெல்லி: முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது கனவு ஐபிஎல் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அதில் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் டோணிக்கும் இடம் கொடுத்துள்ளார். தவறாமல் விராத் கோஹ்லியும் இடம் பிடித்துள்ளார்.
9வது ஐபிஎல் தொடரில் படு மோசமாக சொதப்பிய அணி டோணியின் சூப்பர்ஜெயன்ட்ஸ். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த அணி பரிதாபமாக வெளியேறியது. பிளே ஆப் பிரிவுக்குக் கூட இது தகுதி பெறவில்லை.
இருப்பினும் டோணிக்கும் தனது கனவு அணியில் இடம் கொடுத்துள்ளார் கவாஸ்கர்.

யார் யார்
கவாஸ்கரின் அணியில் டேவிட் வார்னர், அஜிங்கியா ரஹானே, விராத் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ், யூசுப் பதான், டோணி, ஆண்ட்ரே ரஸ்ஸல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சஹல், முஸ்தபிசுர் ரஹ்மான், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

7வது இடம் பிடித்த புனே
இந்தத் தொடரில் டோணி தலைமையிலான புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி 7வது இடத்தையே பிடித்தது. இதற்கு அடுத்த இடம், அதாவது கடைசி இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உட்கார்ந்துள்ளது.

நல்ல விக்கெட்கீப்பர்
டோணி குறித்து கவாஸ்கர் கூறுகையில், டோணிதான் என்னைப் பொறுத்தவரையில் இன்னும் சிறந்த விக்கெட் கீப்பர். எனவே அவரது இடம் அவருக்கே போக வேண்டும்.

ரோஹித்துக்கு இடமில்லை
கவாஸ்கரின் அணியில் ரோஹித் சர்மாவுக்கு இடம் இல்லை. இவர் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆவார். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா 489 ரன்களைக் குவித்திருந்தார். ஐந்து அரைசதம் இதில் அடக்கம்.

ஹைதராபாத்துக்கு 4
கவாஸ்கரின் அணியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திலிருந்து 4 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 3 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்தவர்கள். புனே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிலிருந்து தலா 2 பேர் இடம் பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications