Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்டி சிறுவனை ஏமாற்றி விளையாடும் டோணி.. டிரெண்டிங்கில் கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்- வீடியோ

Recommended Video

ஐபிஎல் பயிற்சியின் போது சிறுவனுடன் விளையாடும் தோனி- வீடியோ

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ஆகியுள்ளது. முக்கியமாக சிறுவன் ஒருவனை டோணி ஏமாற்றி விளையாடும் வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.

ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இரண்டு வருடங்களுக்கு பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணி நியமிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை விளம்பரம்

சென்னை அணியின் விளம்பரத்திற்காக இந்த முறை நிறைய வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. பழைய வீடியோக்களுக்கு பதில் காமெடியாக நிறைய புதிய வீடியோக்களை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் டோணி கேட்ச் பிடிப்பது போன்ற விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர் கூட்டம்

நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் மீண்டும் ஐபிஎல் பீவர் அதிகம் ஆகியுள்ளது. சென்னை அணியின் பேருந்து எங்கெல்லாம் செல்கிறதோ எங்கெல்லாம் ரசிகர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து செல்கிறார்கள். நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முடித்து சென்ற வீரர்களை ரசிகர்கள் தொடர்ந்து சென்றுள்ளார்கள்.

புதிய பயிற்சி

பேட்டிங் பயிற்சி எடுக்கும் அதே நேரத்தில் அவ்வப்போது பவுலிங் பயிற்சி டோணி செய்து வருகிறார். நேற்று அவர் பிராவோவிற்கு பவுலிங் செய்து பயிற்சி எடுத்தார். இதில் டோணி பிராவோவை விக்கெட் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி

தற்போது டோணி குட்டி சிறுவன் ஒருவனுடன் விளையாடும் வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது. அதில் டோணி அந்த சிறுவனுடன் ஹை-பை விளையாடுகிறார். நேற்றில் இருந்து இந்த வீடியோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.

Story first published: Sunday, March 25, 2018, 12:49 [IST]
Other articles published on Mar 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+