Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தை சார் கூல் கேப்டன்.. முதல்முறையாக வெற்றியை குதித்து கொண்டாடிய டோணி - வீடியோ

Recommended Video

முதல்முறையாக வெற்றியை குதித்து கொண்டாடிய டோணி

மும்பை: நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வென்ற போது டோணி சந்தோசமாக கொண்டாடி இருக்கிறார். முதல்முறையாக அவர் இப்படி வெற்றியை கொண்டாடி உள்ளார்.

நேற்று நடந்த மும்பைக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பிராவோ சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கடைசி நேரத்தில் போட்டி மாறும் போது டோணி மிகவும் உற்சாகமாக இருந்தார். முதல்முறையாக அவர் தன்னுடைய உணர்வுகளை கேமரா முன்பு காட்டினார்.

மிஸ்டர் கூல்

மிஸ்டர் கூல்

கேப்டன் டோணிக்கு கூல் கேப்டன் என்பதுதான் செல்லப்பெயர் என்று குழந்தைக்கு கூட தெரியும். அவர் என்ன மோசமான விஷயம் நடந்தாலும் தன்னுடைய முகத்தில் வித்தியாசம் காட்ட மாட்டார். வெற்றி பெற்றாலும் கூட அதை பெரிய அளவில் அவர் இதுவரை கொண்டாடியதே இல்லை. எப்போதும் சமநிலையுடன் இருப்பார்.

சோகமாக சென்றார்

சோகமாக சென்றார்

ஆனால் நேற்றைய போட்டியில் அவர் அவுட்டாகி சென்றதும் மிகவும் சோகமாக இருந்தார். அவருக்கு அடுத்து ஜடேஜா, ஹர்பஜன் என வீரர்கள் வரிசையாக அவுட் ஆனதும் அவர் மிகவும் சோகமாக ஆனார். முதல் முறை அவர் கேமராவிற்கு முன் மிகவும் சோகமாக இருந்ததை காட்டிக்கொண்டுள்ளார்.

பதட்டம்

பதட்டம்

அதேபோல் அவர் கடைசி மூன்று ஓவர்களில் மிகவும் பதட்டமாக இருந்தார். பிராவோ அங்கு சிக்ஸ் அடிக்கும் போது, டோணி இங்கும் வெறும் கையை வைத்து சிக்ஸ் அடிப்பது போல விளையாடிக் கொண்டு இருந்தார். அதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பிபி எகிறியது. இதற்கு முன்பு டோணி இதுபோல் நடந்து கொண்டது இல்லை.

கொண்டாட்டம்

அதன்பின் சென்னை அணி வெற்றி பெற்ற போதும் டோணி மிகவும் சந்தோசமாக கொண்டாடினார். வேகமாக கீழே இறங்கி வந்து பிராவோவை கட்டிப்பிடித்தார். அதே போல் அவர் உள்ளே சந்தோசமாக கைதட்டி கொண்டாடியது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

2 வருட பசி

2 வருட பசி

இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். 2 வருடமாக சென்னை அணி விளையாடாத காரணத்தால் அவர் சோகமாக இருந்துள்ளார். இப்போது முதல் போட்டியில் வெற்றி பெறுவது அவருக்கு பெரிய அளவில் சந்தோசத்தை கொடுத்து இருக்கிறது. அதனால்தான் அவர் இப்படி போட்டியை கொண்டாடி இருக்கிறார்.

Story first published: Sunday, April 8, 2018, 12:23 [IST]
Other articles published on Apr 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+