Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தோனி ரன் அடிக்காவிட்டால் என்ன; திறமையான கேப்டன்சியை பாருங்க'.. சொல்வது ஆஸ்திரேலியா ஜாம்பவான்!

டெல்லி: ஐ.பி.எல் தொடரில் தோனி ரன் அடிக்காவிட்டாலும், அவரது கேப்டன்சி மிக சிறப்பாக உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளில் அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகும்.

கடந்த சீசனில் ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனால் இந்த முறை சி.எஸ்.கே வீறுகொண்டு எழுந்தது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் சி.எஸ்.கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

தோனி பார்ம்

தோனி பார்ம்

சி.எஸ்.கே அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலிமையாக உள்ளது. தொடர்ந்து ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆனால் அணியின் கேப்டன் தோனியின் பார்ம்தான் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. கடந்த சீசனில் தோனி 200 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்த சீசனில் 10 போட்டிகளில் இதுவரை 52 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் தோனி.

மேத்யூ ஹைடன்

மேத்யூ ஹைடன்

தோனி பார்ம் குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. தோனி பார்மில் இல்லாவிட்டால் என்ன; அணியை அருமையாக வழிநடத்துகிறார். கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுகிறார் என்று சென்னை ரசிகர்கள் கூறுகின்றனர். மற்ற வீரர்கள் ரன் அடிக்கும்போது, தோனியும் ரன் அடிக்க வேண்டும் என்று மற்ற அணியின் ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தோனியின் பார்ம் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் கருத்து கூறியுள்ளார்.

மதிப்புமிக்க வீரர்

மதிப்புமிக்க வீரர்

இது தொடர்பாக மேத்யூ ஹைடன் கூறுகையில், 'ஐ.பி.எல்.லில் மிகவும் மதிப்புமிக்க வீரராக தோனி விளங்குகிறார். தோனி ரன்கள் எடுக்க போராடினாலும் கேப்டனாக ஒரு அணியின் மதிப்புமிக்க பகுதியாக அவர் இருக்கிறார். தோனி இதுவரையிலான போட்டிகளில் சிறப்பான ரன்களை எடுக்கவில்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவர் நிறைய சவால்களை எதிர்கொள்கிறார். அதனை திறம்பட எதிர்கொள்கிறார். கேப்டனாக தோனியின் திறமைகள் அவரை மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.

Recommended Video

MS Dhoni reveals fight with 'brother' Dwayne Bravo over slower balls after CSK hammer Rcb
பிராவோ

பிராவோ

சி.எஸ்.கே.வின் ஒவ்வொரு பகுதியினரும் இப்போது ஒன்றாக வேலை செய்கின்றனர். சி.எஸ்.கே தகுதி சுற்றுக்கு தகுதி பெறுவதில் உச்சத்தில் உள்ளது. பிராவோ போன்ற வீரர்கள் இந்த தொடரில் தங்கள் தாக்கத்தை சிறியதாக செய்து இருந்தாலும், அணியின் பேட்டிங், பவுலிங், என இரண்டிலும் அணி வீரர்கள் ஒற்றுமையாக செய்லபடுகின்றனர்' என்று மேத்யூ ஹைடன் கூறினார்.

Story first published: Thursday, September 30, 2021, 20:06 [IST]
Other articles published on Sep 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+