For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

VIDEO : தலன்னா… தல தான்..!! தோனி சிக்சர் அடித்து கலக்கும் அந்த நிமிடம்.. வைரலோ.. வைரல்

Recommended Video

தோனி சிக்சர் அடித்து கலக்கும் அந்த நிமிடம்.. வைரல்-வீடியோ

சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனி பயிற்சியின் போது சிக்சர் அடித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

சில நாட்களாக முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக அவதிப் பட்டு வந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி. அதனால் கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்க வில்லை.

அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னா தலைமை தாங்கினார். இருப்பினும், அந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

தோனி இல்லாத அணி

தோனி இல்லாத அணி

தோனி இல்லாத சென்னை அணியா என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது அப்போதே தெரிய வந்தது. அடுத்தப் போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.

தோனி சிக்சர்

தோனி சிக்சர்

இந்நிலையில் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டு உள்ளது சென்னை அணி. பயிற்சியின் போது வழக்கம் போல சிக்சர் அடித்து தான் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதை காட்டியுள்ளார் தோனி.

பெங்களூருவுடன் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் அடுத்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு பெங்களூருவில் நடைபெறுகிறது. ஏற்கெனவே பெங்களூரு அணியுடன் மோதி வெற்றி பெற்றுள்ள நிலையில் 2வது போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி 230 ரன்கள்

தோனி 230 ரன்கள்

இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடிய தோனி 230 ரன்களை அடித்துள்ளார். அதில் 2 போட்டிகளில் அரை சதம் அடித்துள்ளார்.

Story first published: Sunday, April 21, 2019, 11:08 [IST]
Other articles published on Apr 21, 2019
English summary
Dhoni hits his stylish sixer in net practicing, a video released by csk team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+