Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா பேட்டிங் - மறைமுகமாக சாடிய தோனி.. 2 ஓவர்கள் மோசமாக வீசிட்டோம்.. தோல்வி குறித்து தோனி பேச்சு

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணி 200 ரன்களை அடித்தும் வெற்றி பெற முடியவில்லை.

சேப்பாக்கத்தில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட ஸ்கோர் இதுவாகும். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, நாங்கள் ஆட்டத்தின் நடுப்பகுதியில் ஆட்டத்தை தவற விட்டோம் என நினைக்கிறேன்.

Dhoni indirectly criticize jadeja for his batting and slams bowlers

முதலில் பந்தை எப்படி வீச வேண்டும் பேட்ஸ்மேன் எப்படி அதனை அடிப்பார் என்பதை புரிந்து கொண்டு நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் .அதேபோன்று பேட்டிங்களும் நாங்கள் கூடுதலாக ஒரு பத்து ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும். ஏனென்றால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இதனால் பேட்டிங்கில் தான் அதனை ஈடு செய்ய வேண்டும்.

ஆடுகளம் கொஞ்சம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.மேலும் மெதுவாக பந்து வீசும் போது நல்ல பலனை கொடுத்தது. 200 ரன்கள் என்பது இங்கு சராசரியான ஸ்கோர்தான். ஆனால் நாங்கள் கடைசியில் இரண்டு ஓவர்களை மோசமாக வீசினோம்.
பதிரானா எப்போதும் போல் சிறப்பாக செயல்பட்டார்.ஆனால் அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன்.

நாங்கள் பந்து வீச்சில் என்ன தவறு செய்தோம். இதில் தவறு என்ன நடந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி தற்போது அதே நான்காவது இடத்தில் நீடிக்கிறது. எனினும் பஞ்சாப் அணி தற்போது சிஎஸ்கே பெற்ற அதே புள்ளிகளை பெற்றிருக்கிறது. சென்னை அணி விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி பெற்று நான்கு தோல்வியை தழுவி இருக்கிறது.

Story first published: Sunday, April 30, 2023, 19:54 [IST]
Other articles published on Apr 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+