For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கிரிக்கெட்டின் சகாப்தம்..! அவரால் எதுவும் முடியும்…! புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்

மும்பை:கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி என்று முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர், சென்னை சூப்பர் கிங்சில் விளையாடியவர் மேத்யூ ஹைடன். அவர் தொலைக்காட்சி ஒன்றில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Dhoni is an era of the cricket says former player mathew hayden

அப்போது அவர் பேசியதாவது:உங்க எல்லாருக்கும் தோனியை பற்றி நன்றாக தெரியும். அவர் ஒரு சிறந்த ஒரு வீரர் மட்டுமல்ல. கிரிக்கெட்டின் சகாப்தம். எப்படி பார்த்தாலும் அவர் நமக்குள் ஒருவர். அவரால் எதுவும் முடியும்.

அவர் எப்படி பயிற்சி எடுத்துக் கொள்கிறார் பாருங்கள். பயிற்சியின் போது அவர் பந்துவீசுகிறார், கேட்ச் பிடிக்கிறார்... ரொம்பவும் ரிலாக்சாக இருக்கிறார். நாம் எல்லாம் அவரை போன்றே ரிலாக்சாக இருக்க வேண்டும்.

ஒருவர் உங்களை அமைதிப்படுத்துகிறார்... ஒருவர் உங்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறார் என்றால் அவர் தான் தல. அதுதான் தோனி.. தல என்றால் அதன் அர்த்தம் சென்னைக்கு தலைவர் என்பது. ஆனால் அவர் கிரிக்கெட் உலக தேசத்துக்கே தலைவராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

மேத்யூ ஹைடன் என்று சொல்பவரை விட... மங்கூஸ் பேட் என்று அழைத்தால் உடனடியாக ஹைடன் நினைவுக்கு வருவார். ஏன் என்றால்.. ஐபிஎல் தொடரில் மங்கூஸ் பேட்டை அறிமுகப்படுத்தியவர் அவர் தான். மங்கூஸ் பேட் என்பது கைப்பிடி மிக நீளமானதாக இருக்கும்.

Story first published: Monday, May 13, 2019, 16:36 [IST]
Other articles published on May 13, 2019
English summary
Dhoni is an era of the cricket says former player mathew hayden.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+