Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணிக்கும், கோஹ்லிக்கும் சண்ட... அத டீமே வேடிக்கை பார்க்குது!

கான்பூர்: பேட்டிங் வரிசையை மாற்றியமைத்து, கோஹ்லிக்கு பதிலாக 3வது வரிசையில், ரஹானேவை பேட்டிங் செய்ய அனுப்பியதற்காக கேப்டன் டோணியுடன், கோஹ்லி வாக்குவாதம் நடத்திய தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 304 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடியது.

ரஹானேவுக்கு வாய்ப்பு

ரஹானேவுக்கு வாய்ப்பு

தொடக்க வீரர், தவான் 22 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், கோஹ்லிக்கு பதிலாக ரஹானே களமிறக்கப்பட்டார். அவரும் அரை சதம் அடித்து, ரோகித் ஷர்மாவுடன் அருமையான பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

ஆனால், 4வது களமிறங்கிய கோஹ்லி, 11 ரன்களில் நடையை கட்டினார். ரெய்னாவும் 2 ரன்களில் பெட்டியை கட்ட, டோணி தலையில் பாரம் இறங்கியது. கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்ற போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

கோஹ்லி சொதப்பல்

கோஹ்லி சொதப்பல்

கோஹ்லியின் மோசமான பேட்டிங்கிற்கு, அவர் டோணியுடன் மோதல் போக்கை கடைபிடித்தது காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 3வது இடத்தில் களமிறங்கும் கோஹ்லிக்கு, 4வதாக களமிறங்க விரும்பமில்லையாம்.

டோணியுடன் வாக்குவாதம்

டோணியுடன் வாக்குவாதம்

ரஹானேவை தனக்கு பதிலாக, வேண்டுமென்றே களத்துக்கு அனுப்பியதாக கூறி, டோணியுடன், கடும் வாக்குவாதத்தில் கோஹ்லி ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதை சக டீம் வீரர்கள் சங்கடத்தோடு பார்த்துள்ளனர். இருப்பினும், டோணி இந்த தகவலை மறுத்துள்ளார்.

தொடர் மோதல்

தொடர் மோதல்

டெஸ்ட் அணியின் கேப்டனான கோஹ்லி, டோணியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டிருப்பது இந்திய அணியின் சக வீரர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

கொம்பு சீவல்

கொம்பு சீவல்

இந்திய அணியில் ஐசிசி சேர்மன் சீனிவாசனின் ஆதிக்கம் குறைந்த பிறகு, பதவிக்கு வந்த ரவி சாஸ்திரி போன்றோர் அணியில் டோணிக்குள்ள முக்கியத்துவத்தை குறைத்து, அவருக்கு போட்டியாளராக கோஹ்லியை கொம்பு சீவி விடுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 12, 2015, 15:37 [IST]
Other articles published on Oct 12, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+