தோனி ரசிகர்கள் திடீர் உற்சாகம்.. ராகுல் டிராவிட்டை அழைத்து பேசும் பிசிசிஐ.. காரணம் என்ன தெரியுமா??
இந்திய அணியில் தோனியை இணைப்பது குறித்து பிசிசிஐ எடுத்துள்ள முடிவு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மீண்டும் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து விமர்சனங்கள் குவிந்துக்கொண்டே செல்கின்றன. அடுத்த முறையாவது கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு, புதிய படையை உருவாக்க வேண்டும் என்ற ஆலோசனை தான் தலை தூக்கியிருக்கிறது.

புது திட்டம்
அதற்கேற்றார் போலவே ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரை தொடர்ந்து இளம் படையை ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதற்கான முதல்படியாக தான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படவுள்ளார்.

கேப்டன்சி
இனி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். இதே திட்டம் தான் பயிற்சியாளர்களிடமும் செயல்படபோகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிச்சுமையை குறைக்க, தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கவுள்ளனர்.

தனித்தனி பயிற்சியாளர்
அதன்படி இனி டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கு மட்டும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு என தனி பயிற்சியாளர் செயல்படுவார். இதற்கான அறிவிப்புகள் தான் புதிய தேர்வுக்குழுவின் முதல் பணியாக இருக்கும் எனத்தெரிகிறது.

தோனிக்கு பதவி
இந்நிலையில் அது தோனியாக தான் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் 5 மாதங்களில் தோனி ஓய்வு பெற்றுவிடுவார். எனவே அவரை இந்திய டி20 அணியின் இயக்குநராக தோனியை நியமிக்க முடிவெடுத்துள்ளனர். அவரே பயிற்சியாளராகவும் இருப்பார் எனக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications