
வெற்றி உறுதியாகணும்
இந்நிலையில், இப்போட்டியில் வெற்றியை உறுதி செய்தாக வேண்டும் என்ற முனைப்போடு சென்னை அணி உள்ளது. காரணம், கடைசி மூன்று லீக் போட்டியிலும் சென்னை வரிசையாக தோற்றிருக்கிறது. ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் என்று மூன்று அணிகளிடமும் தோற்றுள்ளது. இதில், ராஜஸ்தானும், பஞ்சாபும் பிளே ஆஃப் கூட முன்னேற முடியாத அளவுக்கு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகள். ஆனால், இந்த இரு அணிகளிடமும் தான் சிஎஸ்கே செமத்தியாக அடி வாங்கியது. டெல்லியிடம் கூட, கடைசி ஓவரில் தோற்றது.

அதுவே மைனஸ்
இந்நிலையில், இந்த தொடர் தோல்விகளில் இருந்து Qualifier 1 போட்டியில், கட்டாயம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறது தோனி ஆர்மி. சென்னை அணியின் மிடில் ஆர்டரும், கேப்டன் தோனியின் மோசமான பேட்டிங்கும் தான் மைனஸாக உள்ளது. இந்நிலையில், ரெய்னாவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட உத்தப்பாவால் ஒரு துளி இம்பேக் கூட ஏற்படுத்த முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு சிக்ஸ் கூட அவரால் அடிக்க முடியவில்லை. இதற்கு ரெய்னாவே காயத்தோடு வந்து விளையாடிருக்கலாம் என்று விமர்சிக்கப்பட்டது.

இளம் வீரர் ரெடி
இந்நிலையில், நாளையை போட்டியில் ரெய்னா விளையாடுவாரா என்பது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றே தெரிகிறது. இதனால், மிடில் ஆர்டரில் உத்தப்பாவுக்கு பதில் இளம் வீரரை களமிறக்க தோனி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனியர் வீரர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றுவதால், ருதுராஜ் கெய்க்வாட் போன்று ஒரு இளம் இரத்தம் பிளே ஆஃபில் களமிறங்கினால், அணிக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் என்று தோனி நம்புகிறாராம்.

தோனி முடிவு
இதனால், தமிழக வீரர் என்.ஜெகதீசன் உத்தப்பாவுக்கு பதிலாக களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதிக்க வேண்டும் என்ற வேட்கையோடு காத்திருக்கும் ஜெகதீசனுக்கு வாய்ப்பளித்தால், அது மன ரீதியாக அணி வீரர்கள் இடையே ஒரு Refreshing ஆக அமையும் என்றும், அந்த Refresh ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷனை அணியில் உருவாக்கும் என்றும் கருதுகிறாராம். இதுகுறித்து அணி மீட்டிங்கில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சில போட்டியில் ஜெகதீசனுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. பெங்களூரு அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் 28 பந்துகளில் 33 ரன்கள் அடித்திருந்தார். இதில் 4 பவுண்டரிகள் அடக்கம். அதில் ஒன்று 'Switch Hit'. தனது திறமையை ஓரளவு அன்று வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இப்போது பிளே ஆஃபில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் முடிவில் தோனி இருப்பதாக தெரிகிறது. இவருக்கு எதிரான டெல்லி எந்தவித ஸ்டிராடஜியும் இன்றி களமிறங்குவது, நிச்சயம் சென்னைக்கு கைக்கொடுக்கும் என்றும் தோனி நம்புகிறாராம். இதுகுறித்து, ஜெகதீசனிடம் தோனி பேசியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, "நீ நீண்ட நேரம் நிலைத்திருந்து விளையாட வேண்டிய அவசியமில்லை. ஆனால், களத்தில் நீ இருக்கும் ஒவ்வொரு நொடியும், எதிரணி பதட்டத்தில் இருக்க வேண்டும். 20 பந்துகளை சந்தித்தாலும், உன்னிடமிருந்து எனக்கு தேவை 40 ரன்கள் தான். அதைத் தாண்டி அடிப்பது உன்னுடைய சாமர்த்தியம். ஆனால், நான் உன்னிடம் இருந்து எதிர்பார்ப்பது 20 பந்துகளுக்கு 40 ரன்கள்" என்று கூறியிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications