என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி!
சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர்.
டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான என் வழி தனி வழி என்பார். எனக்கும் அந்த வசனம் மிகவும் பிடிக்கும் என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ளவர்களில் அஷ்வின் டோணியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications