VIDEO:தோனி இருக்கும் போது நடுவர் தேவையில்லை.. மீண்டும் நேர்மையை நிரூபித்த தல
Recommended Video
மொகாலி:பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, ஹர்பஜன் கேட்ட எல்பிடபிள்யூ அப்பீலில் சரியான முடிவை எடுத்த தோனி, தான் நேர்மையானவர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டி நேற்று மாலை 4 மணிக்கு மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக டூபிளசிஸ் 96 ரன்களும், சுரேஷ் ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர்.. இதனால் பஞ்சாப் அணிக்கு 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. அதன்படி தெடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருது
அதிகபட்சமாக ராகுல் 36 பந்துகளில் 71 ரன்களையும், பூரான் 36 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகன் விருதினை ராகுல் பெற்றார். அதிரடியாக விளையாடிய கே எல் ராகுல் 36 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

தோனியின் நேர்மை
போட்டியின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் உண்டு. அந்த சம்பவம் தான் தோனியின் நேர்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அந்த போட்டியில், ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் வீசிய பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடினார்.
அம்பயரிடம் அப்பீல்
அந்த பந்தினை எல்பிடபிள்யூ என்று நினைத்து அம்பயரிடம் முறையிட்டார். ஆனால், தோனியோ அந்த பந்து கிளவுஸ்சில் பட்டது என்று தெளிவாக சொன்னார். மேலும், நான் ரிவீயு கேட்கவில்லை கிளவுஸ்சில் பட்டது என்று சொல்கிறேன் ஹிந்தியில் கூறினார்.

அனைவரும் பிரமிப்பு
தோனி இதுபோன்று சரியான முடிவினை எடுப்பது முதன்முறை இல்லை. ஸ்டம்பிற்கு முன்னால் இருக்கும் அம்பயர் மற்றும் பவுலருக்கு தெரியாத அந்த பந்தினை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து தோனி சரியாக கணித்தது அனைவரையும் பிரமிக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications