For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாவம் அவர் வாழ்க்கையில் விளையாடிவிட்டது.. தோனி குறித்து பெரிய சீக்ரெட்.. உண்மையை உடைத்த பிசிசிஐ

சென்னை: 2021 உலகக் கோப்பை டி 20 தொடருக்கு தோனியை தேர்வு செய்ய திட்டமிட்டதாக பிசிசிஐ தேர்வுக்குழு நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக அறிவிக்கப்பட்ட டி 20 இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவான், சூர்யா குமார், ஹர்திக் பாண்டியா, பண்ட் , இஷான் கிஷான், சாகல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர், ராகுல் திவாதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாகர், சைனி , ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகி இருக்கும் இதே அணிதான் உலகக் கோப்பை டி 20 தொடரிலும் ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை டி 20 தொடரில் இதே வீரர்கள் + கூடுதலாக இரண்டு மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பும்ரா, ஜடேஜா, ஷமி இந்திய அணியில் இணைய வாய்ப்புள்ளது.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

இப்படிப்பட்ட நிலையில் 2021 உலகக் கோப்பை டி 20 தொடருக்கு தோனியை தேர்வு செய்ய திட்டமிட்டதாக பிசிசிஐ தேர்வுக்குழு நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி உலகக் கோப்பை டி 20 தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. இதற்கான அணியை தேர்வு செய்ய ஆலோசனைகள் நடக்கிறது.

தோனி பிளான்

தோனி பிளான்

இதில் தோனியை ஆட வைக்கும் திட்டம் இருந்தது. கோப்பையை வென்றுவிட்டு அதன்பின் அவர் ஓய்வை அறிவிப்பார் என்றுதான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசியில் கொரோனா அவரின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது.

காலி

காலி

கொரோனா காரணமாக ஒரு வருடம் அவர் ஆட முடியவில்லை. இதனால் அவர் ஓய்வு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே இவரை அணியில் எடுக்க முடியவில்லை என்று பிசிசிஐ நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

பிளான் என்ன

பிளான் என்ன

தோனி அணியில் இருந்து கொரோனா இல்லாமல் போய் இருந்தால் அவர் தொடர்ந்து ஆடி இருப்பார். டி 20 உலகக் கோப்பை தொடரில் அவரை சேர்த்து இருப்போம் என்று பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் ஒரு வருடம் எடுத்த பிரேக் காரணமாக மொத்தமாக அவரின் கிரிக்கெட் கெரியர் முடிவிற்கு வந்துள்ளது .

Story first published: Monday, February 22, 2021, 8:39 [IST]
Other articles published on Feb 22, 2021
English summary
Dhoni might have played in the Team India T20 squad for World Cup if Covid 19 wasn't there says BCCI sources.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+