Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யோகா பண்ணுங்க டோணி, உங்க கிட்ட இருந்த கூல் போயிருச்சு... பேடி நக்கல்

டெல்லி: இனிமேலும் கேப்டன் கூல் என்று டோணியைக் கூற முடியாது. அவர் முதலில் யோகாசனம் பழகிக் கொள்ளட்டும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

எதற்கெடுத்தாலும் விமர்சனம் செய்பவர் பேடி. யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டார். குறிப்பாக டுவென்டி 20 கிரிக்கெட்டை மிகக் கடுமையாக சாடி வருபவர்.

இந்த நிலையில் இந்திய கேப்டன் டோணி மீது பாய்ந்துள்ளார் பேடி. கேப்டன் கூல் என்று இனியும் அவரைக் கூறக் கூடாது என்று பேடி கூறியுள்ளார். அவர் யோகா பழகிக் கொண்டு தன்னை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேடி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேடி கூறியிருப்பதாவது:

முதல் முறையாக

முதல் முறையாக

முதல் முறையாக அறிவுப்பூர்வமாக பேசாமல் முட்டாள்தனமாக பேசியுள்ளார் டோணி. எனவேதான் அவரால் இனியும் கேப்டன் கூல் ஆக இருக்க முடியாது என்று கூறுகிறேன்.

குழப்பமடைந்துள்ளார்

குழப்பமடைந்துள்ளார்

டோணி குழப்பமடைந்துள்ளார். அணியைக் குறை சொல்கிறார். தனது கூலை அவர் இழந்து விட்டார் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் தேவை.

பவுலருடன் மோதலாமா

பவுலருடன் மோதலாமா

வங்கதேசத்துடனான மோதலின்போது பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுடன் மோதினார் டோணி. அவரது குணத்திற்கு நேர் மாறானது இது. அவர் அப்படி செய்யக் கூடியவர் அல்ல.

மனசு சரியில்லை

மனசு சரியில்லை

டோணிக்கு மனநிலை சரியில்லை. குழப்பமாக இருக்கிறது. ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்கிறார். அவர் யோகா கற்றுக் கொண்டு சாந்தி அடைய வேண்டும்.

வங்கதேசம் நன்றாக ஆடியது

வங்கதேசம் நன்றாக ஆடியது

உண்மையில் வங்கதேசம் இரு போட்டிகளிலும் நன்றாகவே ஆடியது. ஆனால் இந்த டூருக்காக இந்தியா எந்த வகையிலானது ஆயத்தமாக இருந்ததா. ரொம்ப சாதாரணமாக அவர்களை நினைத்து விட்டது இந்தியா.

மெத்தனம் கூடவே கூடாது

மெத்தனம் கூடவே கூடாது

சர்வதேச கிரிக்கெட்டில் மெத்தனம் கூடவே கூடாது. ஆனால் இந்திய வீரர்களின் உடல் மொழியில் மெத்தனம் மிக நன்றாகவே தெரிந்தது.

தோல்வியில் அவமானம் இல்லை

தோல்வியில் அவமானம் இல்லை

தோல்வியில் அவமானம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் கவலை வர வேண்டும். வெறி வர வேண்டும். அதுதான் விளையாட்டு வீரனுக்கு அழகு. வெல்ல வேண்டும் என்ற வெறி வர வேண்டும். அது இந்திய வீரர்களிடம் இல்லை என்றார் பேடி.

Story first published: Tuesday, June 23, 2015, 15:48 [IST]
Other articles published on Jun 23, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+