Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதெல்லாம் பழைய கதை.. தோனிக்கு சுத்தமா டச் விட்டுப் போச்சு.. உண்மையை போட்டு உடைத்த சிஎஸ்கே வீரர்!

சென்னை : தோனிக்கு சுத்தமா டச் விட்டுப் போச்சு... என கூறி இருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான தீபக் சாஹர்.

Recommended Video

தோனிக்கு இப்பெல்லாம் விளையாடவே தெரியல... தீபக் சாஹர் சொன்ன தகவல்

உடனே இது ஏதோ கிரிக்கெட் சம்பந்தமான கருத்து என நினைத்து விட வேண்டாம்.

தோனி முன்பு பப்ஜி (PUBG) எனும் விளையாட்டை ஸ்மார்ட்போனில் விளையாடி வந்தார். அதை இப்போது விளையாடுவது இல்லையாம். வேறு ஒரு விளையாட்டுக்கு மாறி விட்டாராம்.

அந்த விளையாட்டு

அந்த விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடந்த ஆண்டு பல முறை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே பயணம் செய்யும் போது ஒன்றாக கூடி ஸ்மார்ட்போனில் ஏதோ விளையாட்டை விளையாடி வந்தனர். அது சமூக வலைதளங்களில் பரவியது.

பப்ஜி விளையாட்டு

பப்ஜி விளையாட்டு

பின்னர் அது பப்ஜி விளையாட்டு தான் என சில ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இந்திய வீரர்களில் சிலர் மட்டுமே அந்த விளையாட்டை விளையாடினர். அந்த குழுவுக்கு தலைவர் வேறு யாருமல்ல நம் தோனி தான். யார் விளையாடுகிறார்களோ இல்லையோ, தோனி நிச்சயம் ஆடுவார்.

பழைய கதை

பழைய கதை

எனவே, பப்ஜி தோனிக்கு பிடித்த விளையாட்டு என ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி இருந்தது. இந்த நிலையில், "அதெல்லாம் பழைய கதை, இப்ப தோனிக்கு அந்த விளையாட்டே விளையாட தெரியலை" என கூறி இருக்கிறார் தீபக் சாஹர்.

கால் ஆஃப் டியூட்டி ஆடுகிறேன்

கால் ஆஃப் டியூட்டி ஆடுகிறேன்

தீபக் சாஹர் தற்போது கால் ஆஃப் டியூட்டி எனும் விளையாட்டை விளையாடி வருவதாக கூறி உள்ளார். அதே போல, பப்ஜி விளையாட்டை தோனி அதிகமாக விளையாடுவதில்லை எனவும், ஆனால் தான் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

டச் விட்டுப் போச்சு

டச் விட்டுப் போச்சு

தோனி இப்போது வேறு ஒரு விளையாட்டை விளையாடுகிறார் என்ற தகவலையும் அவர் கூறி இருக்கிறார். தோனி மீண்டும் சில சமயம் பப்ஜி ஆட வந்தாலும் அவருக்கு டச் விட்டுப் போய் விட்டதாகவும் கூறி இருக்கிறார் தீபக் சாஹர்.

தோனிக்கு விளையாட தெரியவில்லை

தோனிக்கு விளையாட தெரியவில்லை

நீண்ட நாள் ஆடாததால், பப்ஜி விளையாட்டில் யார் எங்கே இருந்து சுடுகிறார்கள் என்றே தோனிக்கு தெரியவில்லை. அவருக்கு சுத்தமாக டச் விட்டுப் போய் விட்டது எனவும் கூறி உள்ளார் அவர். தோனியின் வெறி பிடித்த ரசிகர்களுக்கு தேவையான முக்கிய தகவலைத் தான் கூறி இருக்கிறார் தீபக் சாஹர்.

Story first published: Wednesday, April 8, 2020, 21:01 [IST]
Other articles published on Apr 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+