Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அழுத்தம் கொடுத்த "சிலர்".. "அதிரடி மன்னன்" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. பரபர நிமிடங்கள்

சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து கேதார் ஜாதவை நீக்க கேப்டன் தோனி தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணி வாட்சன் உட்பட 6 வீரர்களை விடுவித்துள்ளது. கடந்த சீசனில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பிப்ரவரியில் நடக்க உள்ள மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான வீரர்கள் ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் இருந்து கேதார் ஜாதவை நீக்க கேப்டன் தோனி தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. தோனியும் ஜாதவும் களத்திற்கு வெளியே நெருங்கிய நண்பர்கள். ஜாதவிற்கு தொடக்கத்தில் இருந்து ஊக்கம் கொடுத்தவர்தான் தோனி . இதனால் ஜாதவை நீக்க தோனி விரும்பவில்லை.

போட்டி

போட்டி

அதேபோல் சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும் ஜாதவ் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அணியின் வெற்றிக்கு தொடர்ந்து ஜாதவ் முக்கிய காரணமாக இருந்து வருகிறார். இப்படி இருக்கும் போது ஜாதவை நீக்குவதில் தோனிக்கு பெரிய விருப்பம் இல்லை என்று கூறுகிறார்கள்.

மீண்டும் வர வேண்டும்

மீண்டும் வர வேண்டும்

மீண்டும் அணியில் கொண்டு வந்து அவரை பார்மிற்கு திருப்ப தோனி நினைத்து இருக்கிறார். ஆனால் இவரை மீண்டும் அணியில் எடுக்கும் எண்ணம் சிஎஸ்கே அணி நிர்வாகிகளுக்கு இல்லை என்று கூறுகிறார்கள். இவர் பார்மிற்கு திரும்புவார் என்று நம்பி 7.8 கோடி ரூபாயை செலவு செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

நீக்கம்

நீக்கம்

இதன் காரணமாக ஜாதவை வைக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து விவாதம் நிலவி வந்துள்ளது. ரெய்னாவை அணியில் வைப்பது உறுதியானதால் நேற்று மதியமே ரெய்னா குறித்த செய்திகள் வெளியாகிவிட்டது. ஆனால் ஜாதவை நீக்குவது தொடர்பாக கடைசி நொடி வரை விவாதம் நடந்துள்ளது என்கிறார்கள்.

விவாதம்

விவாதம்

கடைசி நொடி வரை ஜாதவை நீக்குவதா வேண்டாமா என்று விவாதம் நடந்துள்ளது. அதன்பின்பே ஜாதவை நீக்கிவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவரை மற்ற அணிகள் ஐபிஎல் தொடரில் ஏலம் எடுக்குமா என்பதும் சந்தேகம் என்கிறார்கள்.

Story first published: Thursday, January 21, 2021, 13:09 [IST]
Other articles published on Jan 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+