Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என் வாழ்க்கையில… நான் ரொம்ப கஷ்டப்பட்ட விஷயம் இதுதான்.. குமுறி தள்ளிய தோனி

Recommended Video

மேட்ச் பிக்சிங் சர்ச்சை: உணர்ச்சி வசப்பட்ட தோனி

சென்னை: தமது வாழ்நாளில் மிகவும் கஷ்டப்பட்ட விஷயம் என்றால் அது மேட்ச் பிக்சிங் தொடர்பான சர்ச்சை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டாராக வலம் வருகிறார். அவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே தனி.

முதல் போட்டியில் அவரது அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான டிக்கெட்டுகளும் ஒரே நாளில் விற்று தீர்ந்துவிட்டன.

2 ஆண்டுகள் தடை

2 ஆண்டுகள் தடை

2013ல் நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுப்பட்ட புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பின் கடந்த ஆண்டில் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்பியன் பட்டம்வென்றது.

ஆவணப்படம் ரிலீஸ்

ஆவணப்படம் ரிலீஸ்

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பாட் பிக்சிங் பற்றி ‘ ரோர் ஆப் தி லயன்' ஆவணப்படம் இன்று முதல் இணையதளத்தில் ஒளிபரப்பானது. அதில் தமது மனதில் இருப்பவற்றை தோனி கொட்டி இருக்கிறார்.

மேட்ச் பிக்சிங் தான்

மேட்ச் பிக்சிங் தான்

இதுகுறித்து தோனி கூறி இருப்பதாவது:நான் இன்று என்னவாக இருக்கிறேனோ... அதற்கு கிரிக்கெட் தான் காரணம். என்னை பொறுத்த வரை உலகில் மிக பெரிய குற்றம் கொலையல்ல, அது மேட்ச் பிக்சிங் தான்.

பெரிய தாக்கம்

பெரிய தாக்கம்

இதை தனி ஒருவரால் செய்ய முடியாது. குறிப்பாக எனது பெயருடன் இது வெளியாகும் போது தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரிக்கெட் மீதான நம்பிக்கை

கிரிக்கெட் மீதான நம்பிக்கை

இது போன்ற தருணங்களில் மக்கள் கிரிக்கெட் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள். எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு கடினமான விஷயத்தை நான் கடந்ததே இல்லை.

ஆயிரம் கேள்விகள்

ஆயிரம் கேள்விகள்

அப்போது தனிப்பட்ட வீரராகவும், கேப்டனாகவும் என்னுள் ஆயிரம் கேள்விகள் இருந்தன. மேட்ச் பிக்சிங் கண்டிப்பாக தவறான விஷயம் தான்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

ஆனால் அணியின் வீரர்களோ, உறுப்பினர்களோ ஈடுபடவில்லை. என்ன நடந்தது என்பதை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Story first published: Wednesday, March 20, 2019, 15:06 [IST]
Other articles published on Mar 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+