Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் இல்லை..! அதை தாண்டி ராணுவத்தில் தோனியின் புது கேம் இது தான்.. கலக்குங்க தல..!

Recommended Video

Dhoni Playing Volleyball | ராணுவத்தில் தோனியின் புது ஆட்டம் இது தான்- வீடியோ

காஷ்மீர்: ஆர்மி கேம்ப்பில் உள்ள தல தோனி, வாலிபால் விளையாடிய, ராணுவ உடையில் பாடிய வீடியோ இணையத்தில் கலக்கோ, கலக்கு என்று கலக்கி வருகிறது.

இந்திய அணி சுற்றுப்பயணமாக வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 3 ஒருநாள், 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து முடிந்தன.

இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2க்கு 1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தல தோனி இடம்பெற வில்லை.

கவலைப்படாத தோனி

கவலைப்படாத தோனி

உலக கோப்பையில் அவரது பேட்டிங் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவர் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று முன்னாள் ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலரும் கூறி வந்தனர். ஆனால் தோனியோ அதை பற்றி கொஞ்சம் கூட கவலை ப்படாமல் இருந்தார்.

2 மாத ஓய்வு

2 மாத ஓய்வு

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தாம் சேர்க்கப்பட மாட்டோம் என்பதை உணர்ந்த அவர், இந்திய ராணுவத்தில் சேவை செய்ய இரண்டு மாத ஓய்வில் சென்றுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அணியில் விளையாடி வருகிறார்.

தோனி வீடியோ

தோனி வீடியோ

இந்நிலையில் ஆர்மி கேம்ப்பில் தோனி வாலி பால் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சாதாரண டிராக் சூட்டில் சக வீரர்களுடன் அவர் அசத்தலாக வாலிபால் விளையாடுகிறார். சில வினாடிகளே நீடிக்கும் அந்த வீடியோ கலக்கி வருகிறது.

பாடும் தோனி

இந்த வீடியோவுடன் மற்றொரு வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப் பட்டது. அந்த வீடியோவில் தோனி ராணுவ உடையுடன் இருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு பாடலை பாடுகிறார்.

பாட்டு பாடி அசத்தல்

பாடகர் முகேஷின் 'மெயின் பால் தோ பால் கா ஷைர் ஹூன்' பாடலை அனைவர் முன்னிலையிலும் பாடி அசத்தினார். எனக்கு பின்னே எத்தனையோ திறமையானவர்கள் வரலாம், அது எந்த துறையிலும் வரலாம் என்று கூறி அவர் இந்த பாடலை பாடுகிறார். என்றோ எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோவை இப்போதும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து, பாராட்டி மகிழ்கின்றனர்.

Story first published: Monday, August 5, 2019, 11:17 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+