பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான சென்னை போட்டியின் போது... கோலியை விட்டுவிடுங்கள் என்று தோனியிடம் கோரிக்கை வைத்த சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 39வது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும்,தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

இப்போட்டியில் பெங்களூரு அணியை சேர்ந்த ஒரு சிறுமி சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு வித்தியாசமான முறையில் தனது வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அவரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரு அணியின் தீவிர ரசிகையான அந்த சிறுமி கையில் ஒரு பதாகையுடன் மைதானத்தில் சோகமாக இருந்தார். அந்த பதாகையில் அவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது இதுதான்.
தோனி... ப்ளீஸ் விராட் கோலியை விட்டுவிடுங்கள் அவர் ஜெயிக்கட்டும் என்று எழுதி அந்த சிறுமி சோகத்துடன் போட்டியை பார்த்து கொண்டிருந்தார். இதனை மைதானத்தில் இருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடிக்க அந்த சிறுமியின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.