Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியை கேப்டன் பதவியை விட்டு துரத்திய அந்த 5 காரணங்கள்..!

மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக மகேந்திர சிங் டோணி நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த காரணங்கள் இவைதான்.

சமீபகாலமாக டோணி பேட்டிங்கில் சொதப்புவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கேப்டன் பொறுப்புடன் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை என டோணி கருதுகிறாராம்.

பேட்டிங் சொதப்பல்

பேட்டிங் சொதப்பல்

கடந்த வருடம் ஆகஸ்ட் 27ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக அமெரிக்காவின் லாடர்ஹில் பகுதியில் நடைபெற்ற டி20 முதல் போட்டியின்போது கடைசி பந்துக்கு 2 ரன்கள் தேவையென்ற நிலையில் டோணி அவுட்டானது அவரை ஃபினிஷராக நம்பியிருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 23 டி20 போட்டிகளில் 30 ரன்களுக்கு மேல் டோணி எடுத்த முதல் போட்டி அதுவாகவே இருந்தது. டெல்லியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டோணி தன்னை முன்கூட்டியே களமிறக்கிக் கொண்டார். ஆனால் 69 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்த டோணியால், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.

வெற்றி சதவீதம்

வெற்றி சதவீதம்

கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியின் வெற்றியை ஒப்பிட்டு பார்த்தால் டோணியின் வெற்றி சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டில் 13 ஒருநாள் போட்டிகளில் 7ல் மட்டும் இந்தியா வென்றது. 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்ற தொடரும் இதில் அடங்கும். அதேநேரம், கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணி நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியது. தொடர்ச்சியாக 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாத சாதனையை படைத்துள்ளது.

கோஹ்லி ஃபார்ம்

கோஹ்லி ஃபார்ம்

விராட் கோஹ்லி கடந்த வருடத்தில் 1215 ரன்கள் குவித்தார். சராசரி 75.93 ஆகும். அனைத்து வகை போட்டியிலும் மேட்ச் வின்னர், ஃபினிஷராக உள்ளார் கோஹ்லி. எனவே அவரிடமே அனைத்து வகை கேப்டன் பொறுப்பும் செல்ல வேண்டும் என்று கங்குலி, கவாஸ்கர் போன்றோர் தொடர்ந்து கூறி வந்தனர்.

உலக கோப்பை

உலக கோப்பை

டோணிக்கு தற்போது 35 வயதாகிறது. 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, டோணி இந்திய அணிக்காக ஆட வாய்ப்பில்லை என தெரிகிறது. எனவே இதுதான் கேப்டன் பொறுப்பை மாற்றுவதற்கு சரியான தருணம். இந்த போட்டியில் கோஹ்லி முன்னிலையில் உள்ளார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். இது டோணி மீது கூடுதல் நெருக்கடியை கொடுத்தது.

லோதா குழு

லோதா குழு

லோதா குழு அறிக்கையை அமல்படுத்த பிசிசிஐக்கு கடும் உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. பிசிசிஐயில் பல மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், கேப்டன் பதவியில் தொடர டோணி விரும்பவில்லை என தெரிகிறது. தனக்கு கம்ஃபோர்ட்டாக உள்ளவர்களுடன் பணியாற்றவே கேப்டன் என்ற வகையில் டோணி விரும்புகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபோது ரவி சாஸ்திரி அணி மேலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் டங்கன் பிளட்சர்தான் டோணி சாய்ஸ்-ஆக இருந்தது. இப்போதும் தனது விருப்பம்-நடைபெறும் நிகழ்வுகள் இடையே மாறுபாடு ஏற்பட்டால் சிக்கல் என டோணி நினைக்கிறார். வெறுமனே விளையாடிவிட்டு அதை என்ஜாய் செய்துவிட்டு போகலாம் என்பது டோணி விருப்பம் என கூறப்படுகிறது.

Story first published: Friday, January 6, 2017, 16:16 [IST]
Other articles published on Jan 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+