Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல், டி20யெல்லாம் வந்ததுக்கு காரணமே தோனிதான்.. கிரிக்கெட் உலகை புரட்டிப் போட்ட அந்த தரமான சம்பவம்

லண்டன் : தோனி ஓய்வு பெற்றதை அடுத்து அவர் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் விவாதித்து வருகின்றனர்.

Recommended Video

Dhoni’s captaincy was saved by Srinivasan | Oneindia Tamil

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன் பலரும் சுட்டிக் காட்டாத ஒரு விஷயத்தை பற்றி கூறி உள்ளார்.

தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி பெற்ற குறிப்பிட்ட வெற்றியால் தான் அதிக டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகியவை தோன்றியதாக கூறி உள்ளார்.

அறிமுகம்

அறிமுகம்

தோனி 2004இல் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பினிஷராக வலம் வந்தார். 2007இல் இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்து நாடு திரும்பியது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

அடுத்து முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த தொடர் நடந்த போது டி20 போட்டிகள் அதிக பிரபலம் ஆகவில்லை. பலரும் டி20 போட்டியை எதிர்த்து வந்தனர். ஐசிசி முதல் டி20 உலகக்கோப்பை வெற்றி அடைந்தால் அதிக டி20 போட்டிகள் நடத்துவது பற்றி சிந்தித்து வந்தது.

தோனி தலைமையில்..

தோனி தலைமையில்..

அப்போது இந்திய அணி தோனி தலைமையில் அதிக இளம் வீரர்கள் கொண்ட அணியை அனுப்பி வைத்தது. அந்த அணி வெற்றி பெறும் என பிசிசிஐ கூட நம்பவில்லை. ஆனால், தோனி கேப்டன்சி மற்றும் இந்திய வீரர்களின் துடிப்பான ஆட்டத்தால் இந்தியா இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

வரலாறு

வரலாறு

இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஆடியது. அந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று வரலாறு படைத்தது. கிரிக்கெட் ஆடும் நாடுகளிலேயே அதிக ரசிகர்கள் கொண்ட இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பை வென்றதும் இதில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்திய ரசிகர்கள் டி20 போட்டியை ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரிக்கெட் உலகில் டி20 போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை விட அதிக அளவில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

மாற்றத்துக்கு காரணம் தோனி

மாற்றத்துக்கு காரணம் தோனி

இந்த மாற்றத்துக்கு காரணம் அன்று தோனி தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பை வென்றது தான். இதைக் குறிப்பிட்டு தோனி ஓய்வு அறிவிப்புக்குப் பின் பேசினார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசிர் ஹுசைன்.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

"தோனி சிறந்த கேப்டன். இதுவரை உள்ளதிலேயே சிறந்த குறைந்த ஓவர் போட்டிகள் கேப்டன். மிகச் சிறந்த பினிஷர். தோனியை அவுட் ஆக்காத வரை போட்டியை வெல்ல முடியாது." என தோனியின் பெருமைகளை குறித்து பட்டியலிட்டார் நாசிர் ஹுசைன்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

"இந்திய அணி ஜோஹன்னஸ்பர்க்கில் பாகிஸ்தான் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது தான் ஒரு வகையில் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டை கொண்டு வந்தது." என்று தோனியின் 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்து குறிப்பிட்டார் நாசிர் ஹுசைன்.

Story first published: Monday, August 17, 2020, 19:46 [IST]
Other articles published on Aug 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+