For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, ரோஹித், அஸ்வின்.. பெண் குழந்தை பெற்ற அதிர்ஷ்டக்கார அப்பாக்கள் பட்டியலில் இப்ப கோலியும்!

மும்பை : இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இன்று பிற்பகல் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

Recommended Video

குட்டி அனுஷ்கா பொறந்தாச்சு... குஷியில் விராட் கோலி!

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தாய் -சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரவி அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் விராட் கோலியும் இணைந்துள்ளார்.

அனுஷ்கா கர்ப்பம் குறித்து அறிவிப்பு

அனுஷ்கா கர்ப்பம் குறித்து அறிவிப்பு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி அனுஷ்கா சர்மாவின் கர்ப்பம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். இருவராக இருக்கும் தாங்கள் ஜனவரியில் மூவராக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இவர்களுக்கு கடந்த 2017ல் திருமணம் நடந்தது.

நாடு திரும்பிய கோலி

நாடு திரும்பிய கோலி

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்றுவிட்டு தனது குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பியிருந்தார் விராட் கோலி. இந்நிலையில் இன்று பிற்பகல் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பட்டியலில் இணைந்த கோலி

பட்டியலில் இணைந்த கோலி

எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரவி அஸ்வின் ஆகியோருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பெண் குழந்தைகளை பெற்றுள்ள அதிர்ஷ்டக்கார அப்பாக்கள் பட்டியலில் தற்போது விராட் கோலியும் இணைந்துள்ளார்.

விராட் மகிழ்ச்சி

விராட் மகிழ்ச்சி

அப்பாக்களுக்கு எப்போதுமே பெண் குழந்தைகள் மீது பாசம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் தனக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள விராட் கோலி, அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் மிகவும் நலமாக உள்ளதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, January 11, 2021, 18:23 [IST]
Other articles published on Jan 11, 2021
English summary
We are thrilled to share that we are blessed with Baby girl -Virat Kohli
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+