Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியின் பேட்டை நீங்கள் ஸ்பான்சர் செய்யலாம்: ஆனால் ரூ. 8 கோடி கொடுத்தால் மட்டுமே

டெல்லி: கேப்டன் டோணியின் பேட்டை ஸ்பான்சர் செய்ய விரும்புவோர் ரூ. 8 கோடி கொடுத்தால் தவிர குறைந்த விலைக்கு அவர் ஒப்புக் கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை ஒப்பந்தம் செய்ய 3 நிறுவனங்கள் வரிசையில் நிற்கிறதாம். அவர்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய அவர்கள் டோணிக்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. தயாரிப்புகளை விளம்பரம் செய்வது மட்டும் அல்லாமல் அவற்றுக்கு ராயல்ட்டியும் வழங்கும் வகையிலான ஒப்பந்தங்களில் டோணி கையெழுத்திடவிருக்கிறாராம்.

இந்த ஒப்பந்தங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன்பு கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

புதிய ஸ்பான்சர்

புதிய ஸ்பான்சர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டோணியின் பேட்டுக்கு புதிய ஸ்பான்சர் கிடைத்துவிடும் என்று தெரிகிறது.

ரூ.8 கோடி

ரூ.8 கோடி

பேட் ஸ்பான்சர்களிடம் டோணி ரூ.8 கோடி கேட்கிறாராம். ரூ.8 கோடி ரொம்பவே ஓவர் என்று ஸ்பான்சர்கள் நினைக்கிறார்களாம்.

23 பிராண்டுகள்

23 பிராண்டுகள்

டோணி தற்போது 23 பிராண்டுகளை விளம்பரப்படுத்துகிறார். இது தவிர அவ்வப்போது பேட் கம்பெனி லோகோக்களையும் விளம்பரப்படுத்துகிறார்.

பேட் ஸ்பான்சர்ஷிப்

பேட் ஸ்பான்சர்ஷிப்

பொதுவாக பேட் ஸ்பான்சர்ஷிப்புக்கு ஒரு வீரருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2.5 கோடி வழங்கப்படும். அதுவே முன்னணி வீரர்களுக்கு ரூ. 4.5 கோடி முதல் ரூ.5.5 கோடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10 கோடி

ரூ.10 கோடி

முன்னதாக டோணி சூட் விளம்பரத்தில் நடிக்க ரூ.10 கோடி கேட்டதால் அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகர் சைப் அலி கானுக்கு சென்றது.

Story first published: Monday, October 7, 2013, 11:58 [IST]
Other articles published on Oct 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+